பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம் 37.1

செல்வத்தைப் பெற்றவர்கள் உடையவர்கள் என எண்ணி அந்தச் செல்வம் எல்லாவற்றையுமே அந்த அடியார்கள் சொல்லுவதற்கு முன்பே அவர்களுடைய குறிப்பைத் தெரிந்து கொண்டு வழங்கியிருப்பவர் அந்த மானக் கஞ்சாற நாயனார். பாடல் வருமாறு:

மாறில்பெரும் செல்வத்தின் வளம்பெருக மற்ற

- தெலாம் ஆறுலவும் சடைக்கற்றை அந்தணர்தம் அடியாராம் ஈறில்பெரும் திருவுடையார் உடையாரென்

- றியாவையுமே கூறுவதன்முன் அவர்தம் குறிப்பறிந்து

. கொடுத்துள்ளார். ' மாறு-ஒப்பு. இல்-இல்லாத கடைக்குறை. பெரும்பெருமையைப் பெற்றிருக்கும். செல்வத்தின் செல்வத் தினுடைய. வளம் பெருக-வளம் பெருகி உண்டாக. மற்று: அசை நிலை. அது-அந்த வளம். எலாம்-எல்லாம்; இடைக் குறை. ஆறு-கங்கையாறு. உலவும். தங்கும். சடை-சடா பாரத்தினுடைய. க், சந்தி. கற்றை-தொகுதியைத் தம் முடைய தலையின் மேற்பெற்ற அந்தணர்தம்-அந்தண ராகிய சிவபெருமானாருடைய. தம்: அசைநிலை. அடியார்அடியவர்கள் ஒருமை பன்மை மயக்கம். ஆம்ஆக விளங்கும். ஈறு-முடிவு. இல்-இல்லாத கடைக்குறை. பெரும்-பெருமையைப் பெற்றிருக்கும். திரு-செல்வத்தை. உடையார்-பெற்றவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். உடையார்-உடையவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். என்று-என எண்ணி. இ. குற்றியலிகரம். யாவையுமேஎல்லாவற்றையுமே. கூறுவதன்-அந்த அடியார்கள் சொல்லு வதற்கு, முன்-முன்பே. அவர்தம்-அவர்களுடைய, ஒருமை பன்மை மயக்கம். தம்: அசைநிலை. குறிப்பு-குறித்த எண்ணத்தை அறிந்து-தெரிந்து கொண்டு. கொடுத்துவழங்கி. உள்ளார்.இருப்பவர் அந்த மானக் கஞ்சாற நாயனார். -