பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனாதி நாத நாயனார் புராணம் 33

எதிர்த்து. அழிந்த-தோற்றுப் போனதால் உண்டான. மானத்தால்-அவமானத்தால், 'தன்னுடைய’ என்றது, 'அதிசூரனுடைய என்பதை. பல்-பல. படைஞர்-சேனை வீரர்களில்; ஒருமை பன்மை மயக்கம். மீண்டார்தமைபோர்க்களத்திலிருந்து திரும்பி வந்தவர்களை ஒருமை பன்மை மயக்கம். தமை இடைக்குறை. தம்: அசை நிலை. க்: சந்தி, கொண்டு - அழைத்துக் கொண்டு. மின்-மின்னலைப் போல.. ஒளி - ஒளியை வீசும். வாள். வாளாயுதங்களை ஒருமை பன்மை மயக்கம், வீசி-வீசிக் கொண்டு. விறல்-வெற்றியைப் பெறும். வீரர்-வீரரும். வெம்-கொடிய புலி ஏறு-ஆண் புலியை. அன்னவர்தம்போன்றவரும் ஆகிய ஏனாதி நாத நாயனாருக்கு. தம்: அசைநிலை. முன்-முன்னால். சென்று-போய். அதிசூரன்அதிசூரன் என்பவன். நேர்-நேரில். அடர்ந்தான் - போர் புரிந்தான். . -

அடுத்து உள்ள 29-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'அந்த ஏனாதி நாத நாயனாருடைய செயலுக்குரிய வடித்த வாளாயுதத்தின் பிரகாசத்தைப் பார்க்கும் பொருட்டுச் சுற்றி வரும் வட்டத்தில் காண முடியாத வகை யில் கலந்துகொண்டு வாளாயுதத்தைப் பிடித்துக்கொண்டு போரிடும் சமயத்தில் அதிசூரன் தானும் தன்னுடைய சேனை வீரர்களும் உயிர்கள் போகாமல் பிழைத்துத் தோற்றப் பொலிவை உடைய விசாலமான தோள்களைப் பெற்ற வீரராகிய ஏனாதி நாத நாயனாருக்குத் தோல்வி யடைந்து முதுகு காட்டி ஓடினான். பாடல் வருமாறு:

மற்றவர்தம் செய்கை வடிவாள் ஒளி கானச் சுற்றிவரும் வட்டணையில் தோன்றா வகைகலந்து பந்தியடர்க் கும்பொழுதில் தானும் படிை பிழைத்துப் பொற்றடந்தோள் வீரர்க் குடைந்து புறகிட்டான்." மற்று: அசை நிலை. அவர்தம்-அந்த ஏனாதி நாத நாயனாருடைய. தம்: அசைநிலை, செய்கை-போர் செய்யும்