பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பெரிய புராண விளக்கம்-4

செயலுக்குரிய, வடி-வடிக்கப் பெற்ற, வாள்-வாளாயுதத்தி னுடைய, ஒளி-பிரகாச்த்தை. காண-பார்க்கும் பொருட்டு. ச் சந்தி. சுற்றிவரும்-போர்க்களத்தைச் சுற்றிக்கொண்டு வரும் வட்டணையில்-வட்டமான போக்கில். தோன்றாபார்க்க முடியாத வகை-விதத்தில், கலந்து-கலந்துகொண்டு. பற்றி-வாளாயுதத்தைப் பிடித்துக்கொண்டு. அடர்க்கும்போரிடும். பொழுதில்-சமயத்தில். தானும் என்றது அதி சூரனை. படை.சேனை வீரர்களும்; ஆகுபெயர்: ஒருமை பன்மை மயக்கம். பிழைத்து-உயிர்கள் போகாமல் தப்பிப் பிழைத்து. ப்: சந்தி. பொன்-தோற்றப் பொலிவைப் பெற்ற. தடம்-விசாலமான தோள்-தோள்களைக் கொண்ட: ஒருமை பன்மை மயக்கம். வீரர்க்கு-வீரராகிய ஏனாதி நாத நாயனாருக்கு. உடைந்து - தோல்வியை அடைந்து. புற கிட்டான்-முதுகு காட்டி ஒடிப் போனான்.

அடுத்து வரும் 30-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அவ்வாறு முதுகு காட்டி ஓடிப்போன அதிசூரன் யுத்தத் தில் அந்த ஏனாதி நாத நாயனாருக்குத் தோல்வியை அடைந்த அவமானம் மிகுதியாக மேலெழுந்து உண்டாகத் தரையில் படுப்பவன் கண்கள் மூடித் துயில் கொள்ளாதவ னாகி தன்னால் ஆகவேண்டிய செயலை அந்த ஒர் இராத்திரி முழுதும் எண்ணிப்பார்த்து மனம் சுழன்று, "இழிவுமிக்க வஞ் சகச் செயலால் அந்த ஏனாதி-நாத நாயனாரை வென்று விடுவேன்' என்று நினைத்தான். பாடல் வருமாறு:

" போன அதிசூரன் போரில் அவர்க்கழிந்த

மானம்மிக மீதுார மண்படுவான் கண்படான் ஆனசெயல் ஓரிரவும் சிந்தித் தலமந்தே . ஈன்ம்மிகு வஞ்சனையால் வ்ெல்வன். என

- எண்ணினான். ! ? - போன-அவ்வாறு முதுகு காட்டி ஒடிப்போன. அதிசூரன் -அதிசூரன் என்பவன். போரில்-யுத்தத்தில், அவர்க்கு-அந்த ஏன்ாதி நாத நாயனாருக்கு. அழிந்த-தோல்வியை அடைந்த,