பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனாதி நாத நாயனார் புராணம் - 35

மானம்-அவமானம். மிக-மிகுதியாக, மீது ஊர-மேலெழுந்து உண்டாக மண்-தரையில், படுவான்-படுப்பவன். கன் படான்-தன்னுடைய கண்கள் மூடித் துயில் கொள்ளாதவ னாகி; முற்றெச்சம். கண் ஒருமை பன்மை மயக்கம். ஆனசெய்வதற்குரியதான செயல்-செயலை, ஓர் இரவும்-அந்த ஒர் இராத்திரி முழுவதும். சிந்தித்து-எண்ணிப் பார்த்து. அல்மந்து-தன்னுடைய மனம் சுழன்று. ஏ: அசைநிலை. ஈனம் -இழிவு. மிகு-மிக்க. வஞ்சனையால் - ஒரு வஞ்சகமான செயலால், வெல்வன்.ஏனாதி நாத நாயனாரை வென்று விடுவேன். என-என்று; இடைக்குறை. எண்ணினான். நினைத்தான். . -

அடுத்து வரும் 81-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

"நீண்டதாக அமையும் இரவு நேரம் விடியும் காலத்தில் கெட்டவனாகிய அதிசூரனும், "நாட்டில் வாழும் மக்களைக் கொலை செய்யாமல் நாம் இரண்டு பேர்களும் வேறான ஒரிடத்தில் வாளாயுதத்தால் பெறும் தாயபாகத்தைக் கொள்ளும் யுத்தத்தைப் புரிந்து எதிர்ப்பதற்கு வருவாயாக' என்று இதழ்கள் நிரம்பிய மலர்களைக் கட்டிய மாலையை அணிந்த ஏனாதி நாத நாயனாருக்கு ஒர் ஆள்மூலம் கூறிப் போகுமாறு அனுப்பினான். பாடல் வருமாறு:

சேட்டாரும் கங்குல் புலர் காலைத் தீயோனும் காட்டாரைக் கொல்லாதே நாம் இருவேம் வேறிடத்து வாட்டாயம் கொள்போர் மல்ைக்க வருக. எனத் தோட்டார்பூம் தாரார்க்குச் சொல்லிச் செல

- விட்டான். '

சேட்டாரும்-நீண்டதாக அ ைம யு ம். கங்குல்-இரவு நேரம். புலர்-விடியும். காலை-காலத்தில்.த்: சந்தி. தீயோனும் -கெட்டவனாகிய அதிசூரனும். நாட்டாரை-இந்தச் சோழ நாட்டில் வாழும் மக்களை ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி. கொல்லாது.கொலை செய்யாமல், ஏ: அசைநிலை. நாம்-யாம். இருவேம்-இரண்டு பேர்களும், வேறு-வேறான.