பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பெரிய புராண விளக்கம்-4

இடத்து-ஒர் இடத்தில். வாள்-வாளாயுதத்தால் பெறும். தாயம்-தாயபாகத்தை. என்றது இறையிவி நிலம் முதலிய வற்றை. கொள்-பெறும். போர்-யுத்தத்தை. மலைக்க-புரித்து எதிர்ப்பதற்கு வருக-வருவாயாக என-என்று இடைக் குறை. த் சந்தி. தேரட்டர்-இதழ்கள் நிரம்பிய தோடு: ஒருமை பன்மை மயக்கம். பூம்-மலர்களைக் கட்டிய ஒருமை பன்மை மயக்கம். தாரார்க்கு-மாலையை அணிந்திருக்கும் ஏனாதி நாத நாயனாருக்கு. ச் சந்தி. சொல்லி-ஒர் ஆள் மூலம் கூறி. ச்: சந்தி. செல-அந்த ஆளைப் போகுமாறு: இடைக்குறை. விட்டான்-அனுப்பினான்.

அடுத்து வரும் 32-ஆம் கவியின் உள்ளுறை வரும்ாறு:

"இவ்வண்ணம் அதிசூரன் ஒர் ஆள் மூலம் சொல்லி அனுப்பிய செய்தியைக் கேட்டவுடன் ஏனாதி நாத நாயனார், 'அவ்வண்ணம் புரிதல் அழகை உடையதே' என்று எண்ணி அதற்குச் சம்மதித்து, கையில் ஏந்திய வாளாயுதத்தினால் போர் விளையுமாறு செய்வதற்குத்தான் ஏற்றதென்று: ன்ண்னும் அந்தப் போர்க்களத்திற்கு வ்ெற்றியை அடையும் பொருட்டு வலிமையைப் பெற்ற அதிசூரன் வருவானாக." என்று எண்ணி அந்த ஏற்பாட்டை மேற்கொள்பவர் ஆனார் அந்த நாயனார்.' பாடல் வருமாறு:

இவ்வாறு கேட்டலுமே ஏனாதி நாதனார்

அவ்வாறு செய்தல் அழகி தெனஅமைந்து கைவாள் அமர்விளைக்கத் தான்கருதும் அக்களத்தில் வெல்வான் உரவோன் வருக என மேற்கொள்வார்." இவ்வாறு-இவ்வண்ணம். கேட்டலும் - அதிசூரன் ஓர் ஆள் மூலம் சொல்லி அனுப்பிய செய்தியைக் கேட்டவுடன். ஏ: அசைநிலை. ஏனாதி நாதனார்-ஏனாதி நாத நாயனார். அவ்வாறு-அவ்வண்ணம். செய்தல்-புரிதல். அழகிது-அழகை உடையதே. என-என்று எண்ணி: இடைக்குறை. அமைந்துஅதற்குச் சம்மதித்து. கை-கையில் ஏந்திய வாள் - வாளா யுதத்தினால், அமர்-போர். விளைக்க-விளையுமாறு செய்.