பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனாதி நாத நாயனார் புராணம் - 37

வதற்கு. த் சந்தி. தான்' என்றது அதிசூரனை. கருதும்ஏற்ற தென்று எண்ணும். அக்களத்தில்-அந்தப் போர்க் களத்திற்கு உருபு மயக்கம். வெல்வான்-வெற்றியை அடையும் பொருட்டு. உரவோன்-வலிமையைப் பெற்ற. வருக-அதிசூரன் வருவானாக. என-என்று எண்ணி; இடைக் குறை. மேற்கொள்வார்-ஏனாதி நாத நாயனார் அந்த ஏற் பாட்டை:மேற்கொள்பவர் ஆனார்.

பிறகு வரும் 38-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

'ஏனாதி நாத நாயனார் தம்முடைய உறவினர்களில் யாரும் தெரிந்து கொள்ளாத விதத்தில் ஒளியை வீசும் வாளாயுதத்தையும் தோற்றப் பொலிவையுடைய கேடகத் தையும் தாமே எடுத்துக் கொண்டு தம்முடைய திருமாளி கைக்கு வெளியில் வந்து அந்த அதிசூரன் கூறி வருமாறு குறிப்பிட்ட அந்தப் போர்க்களத்திற்குச் சென்று பகை வனாகிய அதிசூரன் வருகையை முன்னால் எதிர்பார்த்துக் கொண்டு தனியாக நின்று கொண்டிருந்தார். பாடல் வருமாறு: . ... . . . . . . . . . . . .

  • சுற்றத்தார் யாரும் அறியா வகைசுடர்வாள்

பொற்பலகை யும்தாமே கொண்டு புறம்போந்து மற்றவன்முன் சொல்லி வரக்குறித்த அக்கள்த்தே பற்றலனை முன்வரவு பார்த்துத் தணிகின்றார்.'

சுற்றத்தார்-ஏனாதி நாத நாயனார் தம்முடைய உறவினர்களில்; ஒருமை பன்மை மயக்கம். யாரும் - ஆரும். அறியா - தெரிந்து கொள்ளாத வகை-விதத்தில். சுடர். ஒளியை வீசும். வாள் - வாளாயுதத்தையும். பொன்தோற்றப் பொலிவைக் கொண்ட தங்கத்தைப் பதித்த' எனலும் ஆம். பலகையும் - கேடகத்தையும். தாம்' என்றது ஏனாதி நாத நாயனாரை. ஏ அசை நிலை. கொண்டு-தம்முடைய கைகளில் எடுத்துக் கொண்டு. புறம்-தம்முடைய திருமள்ளிகைக்கு வெளியில். போந்துவந்து. மற்று: அசைநிலை. அவன்-அந்த அதிசூரன். முன்