பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பெரிய புராண விளக்கம்-4

முன்னால். சொல்லி-கூறி. வர-வருமாறு. க் சந்தி. குறித்த-குறிப்பிட்ட. அக்களத்து - அந்தப் போர்க்களத் திற்கு. ஏ: அசைநிலை. பற்றலனை - பகைவனாகிய அதிசூரனுடைய. முன்-முன்னால், வரவு - வருகையை, பார்த்து-எதிர்பார்த்துக் கொண்டு, த், சந்தி. தனி - தனி தனியாக நின்றார்.நின்று கொண்டிருந்தார்.

அடுத்து உள்ள 34-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

தீங்கான செயலைச் செய்வதற்கு எண்ணி ஏனாதி நாத நாயனாரைப் போர் செய்வதற்கு அழைத்த கெட்டவுன், விபூதியை இட்டுக் கொண்ட நெற்றிகளை உடைய மக்களை எந்த இடத்தில் கண்டாலும் அந்த இடத்தில் அந்த ஏனாதி நாத நாயனாரும் தீங்கான செயலைப் புரி ய மா ட் டார்” என்ற செய்தியைத் தெரிந்து கொண்டவனாகிப் பக்குவமாக விபூதியைப் பூசிக் கொள்வதை முன்பு செய்து பழகாதவனாகிய அதிசூரன்." பாடல் வருமாறு : i -

தீங்கு குறித்தழைத்த தீயோன், திருநீறு தாங்கிய நெற்றியினார் தங்களையே எவ்விடத்தும் ஆங்கவரும் தீங்கிழையார்' எனபதறிந்தானாய்ப் பாங்கில் திருநீறு பண்டு புயிலாதான்." இந்தப் பாடல் குளகம். தீங்கு - திங்கான செயலை: என்றது கொலை செய்வதை. குறித்து - செய்வதற்கு எண்ணி. அழைத்த-ஏனாதி நாத நாயனாரைப் போர் செய்வதற்கு அழைத்த. தீயோன்-கெட்டவனாகிய அதி சூரன், திருநீறு-விபூதியை. தாங்கிய-இட்டுக் கொண்ட, . நெற்றியினார் தங்களை-நெற்றிகளை உடைய பக்தர்களை. தம்: அசைநிலை, நெற்றி ஒருமை பன்மை மயக்கம். ஏ. அசைநிலை. எவ்விடத்தும்-எந்த இடத்தில் கண்டாலும், - ஆங்கு அந்த இடத்தில். அவரும்-அந்த ஏனாதி நாத நாய னாரும். இங்கு-ஒரு துன்பத்தையும். இழையார்-புரிய மாட்டார். என்பது-என்ற செய்தியை. அறிந்தானாய்