பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.8 . 4. பெரிய புராண விளக்கம்

இல்லாத செல்வ வளமாகிய திருவருளைப் பெருகச் செய்து தம்மைப் பாதுகாக்கும் உறவினர்கள் வாழ்த்துக்களை இயம்பிப் பாராட்டுமாறு அந்தத் தங்கக் கொடியைப் போன்ற பெண் குழந்தையை வளர்க்கிறவர் ஆனார் அந்த நாயனார். பாடல் வருமாறு:

பிறந்தபெரு மகிழ்ச்சியினால் பெருமூதுர் களி சிறப்பச் சிறந்தநிறை மங்கலது ரியம்முழங்கத் தேவர்.பிரான் அறந்தலைகின் றவர்க்கெல்லாம் அளவில்வளத் - . தருள்பெருக்கிப் புறந்தருவார் போற்றிசைப்பப் பொற்கொடியை

வளர்க்கின்றார் ." பிறந்த-அந்தப் பெண் குழந்தை பி. ற, ந் த த னா ல் உண்டான. பெரு-பெரிய. மகிழ்ச்சியினால்-களிப்பினால். பெரு-பெருமையைப் பெற்ற, மூதூர்-பழைய ஊராகிய கஞ்சாறுாரில் வாழும் மக்கள்; இட ஆகுபெயர். களிமகிழ்ச்சி. சிறப்ப-தங்களுக்குச் சிறப்பாக உண்டாக.. ச் சந்தி. சிறந்த-சிறப்பு அமைந்த. நிறை-நிறைந்த மங்கல துாரியம்-மங்கல் வாத்தியங்கள் ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: நாகசுரம், ஒத்து, மத்தளம், கஞ்சதாளம், முரசு, பேரிகை, வீணை, யாழ், சல்லரி, களிற்றுயிர்த் து.ாம்பு, சதங்கை முதலியன. முழங்க-முழக்கத்தை எழுப்ப. த்: சந்தி. தேவர்-எல்லாத் தேவர்களினுடைய ஒரும்ை: பன்மை மயக்கம். பிரான்-தலைவனாகிய சிவபெரு. மானுடைய திருவருளால் ஆகு பெயர். அறம்-முப்பத். திரண்டு தருமங்களைப் புரிவதில்; ஒருமை பன்மை மயக்கம். அவை இன்னவென்பதை வேறோரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. தலைநின்றவர்க், கெல்லாம்-தலை சிறந்து நின்ற மக்கள் எல்லோருக்கும். நின்றவர்: ஒருமை பன்மை மயக்கம். அளவு இல்-அளவு: இல்லாத கடைக்குறை. வளத்து-செல்வ வளமாகிய, அருள்-திருவருளை. பெருக்கி-பெருகச் செய்து. ப், சந்தி. புறந்தருவார்.தம்மைப் பாதுகாக்கும் உறவினர்கள்; ஒருமை