பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம் ვ79*

பன்மை மயக்கம். போற்று-வாழ்த்துக்களை ஒருமை பன்மை மயக்கம். இசைப்ப-இயம்பிப் பாராட்டுமாறு. ப்: சந்தி. பொற்கொடியை-அந்தத் தங்கக் கொடியைப் போன்ற பெண் குழந்தையை அன்மொழித் தொகை. வளர்க்கின்றார்-வளர்த்து வருகிறவரானார் அந்த மானக் கஞ்சாற நாயனார். - -

அடுத்து வரும் 13-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'அந்தப் பெண் குழந்தை காப்புக்களை அணிகின்ற இளைய குழந்தைப் பருவம் கடந்து நறுமணம் வீசுவதும், வண்டுகள் மொய்க்கும் மலர்களை அணிவதும், சுருள் சுருளாக இருப்பதும் ஆகிய கூந்தலும், தன்னுடைய காதுகளில் தங்கத்தால் செய்த குழைகளும் சேர்ந்து தொங்க கட்டுதலைப் பெற்ற மெல்லிய சிறிய மாணிக்கங். களைப் பதித்த மேகலையை மேலே அணிந்த சிற்றாடை யோடு கோத்தல் அமைந்த கிண்கிணிகள் ஆடி ஒலியை எழுப்புமாறு சிறிய தளிர்களைப் போன்ற மென்மையான திருவடிகளால் நடந்து. பாடல் வருமாறு: - -

காப்பணியும் இளம்குழவிப் பதம்நீங்கிக் கமழ்

t - - சுரும்பின் பூப்பயிலும் சுருட்குழலும் பொலங்குழையும் உடன்தாழ யாப்புறுமென் சிறுமணிமே கலையணிசிற் - - - - றாடையுடன்

கோப்பமைகிண் கிணி,அசையக் குறுந்தளிர்மெல்

லடியொதுங்கி , '

இந்தப் பாடல் குளகம். காப்பு-அந்தப் பெண் குழந்தை கைக் காப்புக்களையும் காற் காப்புக்களையும்; ஒ ரு ைம பன்மை மயக்கம், அணியும்-அணிந்து கொள்ளும். இளம்இளமையான, குழவிப்பதம்-குழந்தைப் பருவத்தை. நீங்கிகடந்து. க், சந்தி, கமழ்-நறுமணம் வீசுவதும் வினையால னையும் பெயர். சுரும்பின்-வண்டுகள் மொய்க்கும்: ஒருமை. பன்மை மயக்கம். பூ-மலர்களை ஒருமை பன்மை மயக்கம்.