பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 - பெரிய புராண விளக்கம்-4

ப்: சந்தி. பயிலும்-அணிவதும்; வினையாலணையும் பெயர். சுருள்-சுருளாக இருப்பதும் ஆகிய குழலும்-கூந்தலும். பொலம்.பொன்னாற் செய்யப் பெற்ற, குழையும்-தன்னு டைய காதுகளில் அணிந்த குழைகளும்; ஒருமை பன்மை மயக்கம். உடன்-சேர்ந்து. தாழ-தொங்க. யாப்புகட்டுதலை, உறு.பெற்ற, மென்-மென்மையான. சிறுசிறிய. மணி-மாணிக்கங்களைப் பதித்த, ஒருமை பன்மை மயக்கம். மேகலை.மேகலையை. அணி-மேலே அணிந்த. சிற்றாடையுடன்- சிற்றாடையோடு. கோப்பு - கோத்தல். அமை-அமைந்த. கிண்கிணி-கிணிகினிகள்; ஒருமை பன்மை மயக்கம். அசைய-ஆடி ஒலியை எழுப்புமாறு. க்: சந்தி: குறும்-சிறியவையாக இருக்கும். தளிர்- தளிர்களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம், தளிர்-முற்றாத இலை. மெல்-மென்மையான. அடி-திருவடிகளால்; ஒருமை பன்மை மயக்கம். ஒதுங்கி-நடந்து. -

அடிக்குத் தளிர் உவமை: தளிர்போல் மெல்லடியாள் தனை ஆகத்தமர்ந்தருளி.' என்று சுந்தர மூர்த்தி நாய னாரும், அம்தளிர்போற் சேவடியும்.' என்று சேரமான் பெருமாள் நாயனாரும், தளிர் தயங்கும்மே அடியே.' என்று இளம்பெருமான் அடிகளும், “கற்பகப் பூந்தளிரடி.' என்று சேக்கிழாரும், 'பல்லவம் அனுங்கச் செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடியளாகி. (சூர்ப்பனகைப் படலம், 31) என்று கம்பர் பாடியவற்றையும் காண்க. w« هrم

பிறகு வரும் 14-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "அந்த அமுதத்தைப் போன்ற பெண்மணி அழகை உடைய செந்தாமரை மலர்களைப் போன்ற மென்மையான தன்னுடைய கைகளால் தன்னை வாழ்த்திய தாதியர் களுக்கு நடுவில் தன்னுடைய திருமாளிகையில் உள்ள அழகிய முற்றத்தில் மணலால் சிற்றில்லைக் கட்டி மாணிக்கங்களைப் பதித்த ஒலியை எழுப்பும் சிலம்புகள் தன்னுடைய திருவடிகளில் அசைந்து ஒலியை உண்டாக்க, கழற்கோடி ஆடுதல் முதலாக விளையாட்டுக்களைச்