பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம் 383

நாண மன்னவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள்.', * கன்னி அமிழ்தத்தை எதிர்கண்ட கடல் வண்ணன்.' (கோலம் காண் படலம், 3, 28, 30), பெண்ணின் இன்ன முதம் அன்னவள்.'(மந்திரப் படலம், 50),'அமிழ்தினும் இனி யாளே.' (வனம் புகு படலம், 8), உவரிவாயன்றிப்பாற் கடல் உதவிய அமுதே.' (சித்திர கூடப் படலம், 5),'ஆயிடை அமுதின் வந்த அருந்ததிக்கற்பின் அஞ்சொல் வேயிடைத் தோளினாளும்.' (சூர்ப்பணகைப் படலம், 65), 'ஆயிடைத் தாரையென் றமிழ்திற் றோன்றிய வேயிடைத் தோளி :னாள்.', 'அமிழ்தின் வந்த தேவியை..' (வாலி வதைப் படலம், 13, 78) என்று கம்பர் பாடியவற்றையும், 'அண்டர் கடைந்த அமிழ்தோ...' (திக்கு விசயப் படலம், 158), 'தெள் ளமிழ்தம் புரை சீதை.' (அசுவமேத யாகப் படலம், 1.72) என்று உத்தர காண்டத்தில் வருவனவற்றையும் காண்க.

அடுத்து வரும் 15-ஆம் பாடலின் கருத்து வருமாறு :

‘மானக் கஞ்சாற நாயனாருடைய புதல்வி பெற்ற அழகு அவளுடைய திருமேனிக்கு வெளியே விட்டு விளங்க, தெரி யாமல், மறைந்திருந்த அவளுடைய இடையை அவளுடைய கொங்கைகள் தம்முடைய பாரத்தால் வருத்தத்தை உண் .டாக்க, புன்னகை வெளியில் மலர்ச்சியைப் பெறாத அரும்பு களையும், முத்துக்களையும் போலப் பற்கள் என்னும் நறு மணம் கமழும் அரும்புக்ளையும், மென்மையான பூங் கொடியைப் போன்ற இடையையும், குளிர்ச்சியைப் பெற்ற சுருள் சுருளான கூ ந் த ைல யு ம், அழகிய தளிர்களைப் போன்ற சிவந்த கைகளையும், பெற்று விளங்கிய குற்றம் இல்லாத குடும்பத்தில் பிற ந் த கொழுந்தைப் போன்ற அந்தப் பெண்மணிக்குத் திருமணம் புரிவதற்குரிய பருவம் வந்து சேர. பாடல் வருமாறு :

உறுகவின்மெய்ப் புறம்பொலிய ஒளிநுசுப்பை

முலைவருத்த முறுவல்புறம் மலராத முகிழ்முத்த நகையென்னும்