பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 - - பெரிய புராண விளக்கம்-4

நறுமுகை மென் கொடிமருங்குல் களிர்ச்சுருள் அம்

- தளிர்ச்செங்கை மறுவில்குலக் கொழுந்தினுக்கு மனப்பருவம்

- வந்தனைய.

இ ந் த ப் ப ா ட ல் கு ள க ம். உறு-மானக் கஞ்சாற. நாயனாருடைய பு த ல் வி பெற்ற, கவின்-அழகு. மெய்அவளுடைய திருமேனிக்கு. ப்: சந்தி. புறம்-வெளியே. பொலிய-விட்டு விளங்க. ஒளி-தெரியாமல் மறைந்திருந்த, நுசுப்பை-அவளுடைய இடையை முலை-அவளுடைய கொங் கைகள்: ஒருமை பன்மை மயக்கம். வருத்த-தம்முடைய பா. ர த் தா ல் வருத்தத்தை உண்டாக்க. முறுவல்-அவள் செய்யும் புன்னகை புறம்-வெளியில். மலராத-மலர்ச்சியைப் பெறாத. முகிழ்-முல்லை அரும்புகளையும்; ஒருமை பன்மை மயக்கம். முத்த-முத்துக்களையும் போல; ஒருமை பன்மை மயக்கம். நகை என்னும்-பற்கள் என்னும். நறு-நறுமணம் கமழும். முகை-அரும்புகளையும்; ஒருமை பன்மை மயக்கம். மென்-மென்மையான. கொடி-பூங்கொடியைப் போன்ற. மருங்குல்-இடையும். நளிர்-குளிர்ச்சியைப் பெற்ற, ச் சந்தி. சுருள்-சுருள் சுருளான கூந்தலையும்; ஆகு பெயர். அம். அழகிய, தளிர்-தளிர்களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம். ச்: சந்தி. செம்-சிவந்த கை-கைகளையும் பெற்று விளங்கிய ஒருமை பன்மை மயக்கம். மறு-ஒரு குற்றமும். இல்-இல்லாத கடைக்குறை. குல-குடும்பத்தில் பிறந்த. க்: சந்தி. கொழுந்தினுக்கு-கொழுந்தைப் போன்ற அந்தப் பெண்மணிக்கு. மணப் பருவம்-திருமணம் புரிவதற்குரிய பருவம். வந்து அணைய-வந்து சேர.

பிறகு உள்ள 16-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : ‘இலக்குமி தேவிக்கு மேலாக அழகைப் பெற்றுத் திகழ்பவளும், சிவந்த மாணிக்கத் தீபம் என்று சொல்லும்

ஒப்பற்ற தம்முடைய புதல்வியை இந்த மண்ணுலகத்தில் உயர்ச்சியைப் பெற்று விளங்கும் குடும்பத்தின் பரம்பரை