பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம் 385

யைச் சேர்ந்தவராய் ஆலகால விடத்தினால் கரியதாகிய திருக்கழுத்தைப் பெற்ற வேதியராகிய சிவபெருமானாரு டைய அடியவராக விளங்கிய வெற்றிக் கழலைப் பூண்ட திருவடியை உடைய ஏயர் குலப் பெருமகனுக்குத் திருமணத் துக்குரிய பெண்ணாகப் பேசும் பொருட்டு பெருமையைப் பெற்ற முதியவர்கள் வந்து மானக் கஞ்சாற நாயனாருடைய திருமாளிகையை அடைந்தார்கள். பாடல் வருமாறு:

திருமகட்கு மேல் விளங்கும் செம்மணியின் தீபம் எனும் ஒருமகளை மண்ணுலகில் ஓங்குகுல மரபினராய்க் கருமிடற்று மறையவனார் தமராய கழல் ஏயர் பெருமகற்கு மகட்பேச வந்தணைந்தார் பெரு

முதியோர்." திருமகட்கு-இலக்குமி தேவிக்கு. மேல் விளங்கும். மேலாகத் திகழ்பவளும்; வினையாலணையும் பெயர், செம்சிவந்த மணியின் தீபம்-மாணிக்கத் திருவிளக்கு. எனும்என்று சொல்லும்; இடைக்குறை. ஒரு-ஒப்பற்ற, மகளைதம்முடைய புதல்வியை.மண் உலகில்-இந்த மண் உலகத்தில். ஒங்கு-உயர்ச்சியைப் பெற்று விளங்கும். குல-குடும்பத்தின். மரபினராய்-பரம்பரையைச் சேர்ந்தவராய். க்: சந்தி. கருமிடற்று-ஆலகால விடத்தினால் கரியதாகிய திருக் கழுத்தைப் பெற்ற, மறையவனார்-வேதியராகிய சிவபெரு. மானாருடைய. தமராய-அடியவராக விளங்கிய கழல்வெற்றிக் கழலைப் பூண்ட திருவடியை உட்ைய: ஆகுபெயர். ஏயர்-ஏயர்கோன் கலிக்காம நாயனாராகிய, பெருமகற்கு. பெருமையைப் பெற்ற ஆடவனுக்கு. ம க ட் பே சதிருமணத்துக்குரிய பெண்ணாகப் பேசும் பொருட்டு. பெரு-பெருமையைப் பெற்ற, முதியோர்-முதியவர்கள். வந்து-மானக் கஞ்சாற நாயனாருடைய திருமாளிகைக்கு

வந்து. அனைந்தார்-சேர்ந்தார்கள்: ஒருமை பன்மை மயக்கம். - - - பெண்மணிக்கு விளக்கு உவமை: மங்கையர்க்கு

விளக்கன்ன மானையும்.' (கங்கைப் படலம், 16). வில்லி . வாங்கிய சிலையெனப் பொலி நுதல் விளக்கே. (சித்திர

- - - • ... 25 س 4ـ ملاقة