பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம் 38g.

ம ர ங் க ள் வளர்ந்து நிற்கும் குளிர்ச்சியைப் பெற்ற பூஞ் சோலையைக் கொண்ட தம்முடைய பழைய ஊராகிய கஞ்சாறுாரில் திருமணத்துக்கு முன்னால் செய்ய வேண்டிபு. காரியங்களைச் செய்து அமைத்தார். பாடல் வருமாறு: மங்கலமாம் செயல் விரும்பி மகட்பயந்த வள்ளலார் தம்குலம்நீள் சுற்றமெலாம் தயங்குபெரும் களிசிறப்பம் பொங்கியவெண் முளைப்பெய்து பொலங்கலங்கள்

இடைநெருங்கக் கொங்கலர் தண் பொழில்முதுர் வதுவைமுகம் -

- கோடித்தார் .' மங்கலம் ஆம் மங்கலமாக விளங்கும். செய்ல்காரியத்தில். விரும்பிவிருப்பத்தை அடைந்து. மகள்புதல்வியை. பயந்த-பெற்றெடுத்த. வள்ளலார்-வள்ளலா ராகிய மானக் கஞ்சாற நாயனார். வள்ளலார்-தம்மிடம் உள்ள எதைக் கேட்டாலும் மறுக்காமல் கொடுக்கிறவர். தம்-தம்முடைய. குலம்-சாதியில் உள்ள. நீள்-புகழ் நீண்ட. சுற்றம்-உறவினர்கள்; திணை மயக்கம். எலாம்-எல்லாரும்; இடைக்குறை. தயங்கு-விளங்கும். பெரும்-பெரியதாக இருக்கும். களி-மகிழ்ச்சி. சிறப்ப-தங்களுக்குச் சிறப்பாக உண்டாக. ப்: சந்தி. பொங்கிய-பொங்கி எழுந்த, வெண். வெள்ளையாகிய, முளை-நவதானியங்களின் முளைகளை, ஒருமை பன்மை மயக்கம். ப், சந்தி. பெய்து-பாலிகைகளில் முளைக்கச் செய்து. பொலங்கலங்கள்-தங்கத்தால் ஆகிய அணிகலன்களை. இடை-தம்முட்ைய திருமாளிகையாகிய இடத்தில். நெருங்க-நெருங்கி அமையுமாறு. க்: சந்தி, 'கொங்கு-தேன் நிரம்பிய, அலர்:மலர்கள் மலர்ந்த மரங்கள் வளர்ந்து நிற்கும்; ஒருமை பன்மை மயக்கம், தண்குளிர்ச்சியை உடைய. பொழில்-பூஞ்சோன்லையைப் பெற்ற மூதூர்- தம்முடைய பழைய ஊராகிய கஞ்சாறுாரில். வதுவை-திருமணத்துக்கு. முகம்-முன்பு செய்ய வேண்டிய காரியங்களை ஒருமை பன்மை மயக்கம். கோடித்தார். செய்து அமைத்தார். - -