பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 . . பெரிய புராண விளக்கம்-4

பிறகு உள்ள 20 ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: மானக் கஞ்சாற நாயனார் தம்முடைய புதல்வியை மனம் செய்து அளிக்க அவளைக் கைப்பிடிக்க வருகின்ற குறையாத புக ைழ யு ம் பெருமையையும் பெற்ற ஏயர் சாதியிற் பிறந்த பெருமகனும் தம்முடைய சான்றாண்மை நிறைந்த உறவினர்கள் தம்முடைய திருமாளிகையாகிய இடத்திற்கு நிறைந்து வந்து சேர முரசு முழங்க மேகங்கள் த. வ ழு ம் மலர்கள் மலர்ந்த மரங்கள் வளர்ந்து நிற்கும் பூம் பொழிலைப் பெற்ற சஞ்சாறுாரின் பக்கத்தை அடைய.' பாடல் வருமாறு : - -

. கஞ்சாறர் மகட்கொடுப்பக் கைப்பிடிக்க வருகின்ற எஞ்சாத புகழ்ப்பெருமை ஏயர்குலப் பெருமானும் தம்சால்பு கிறைசுற்றம் தலைநிறைய முரசியம்ப மஞ்சாலும் மலர்ச்சோலைக் கஞ்சாற்றின்

- மருங்கணைய." இந்தப் பாடல் குளகம். கஞ்சாறர்-மானக் கஞ்சாற நாயனார். மகள்-தம்முடைய புதல்வியை கொடுப்ப-திரு மணம் செய்து அளிக்க, க்: சந்தி. கைப்பிடிக்க-அவளைக் கையிற் பிடித்துத் திருமணம் புரிந்து கொள்ளும் பொருட்டு. வருகின்ற-மானக் கஞ்சாற நாயனாருடைய திருமாளிகைக்கு வருகிற. எஞ்சாத-குறையாத புகழ்-புகழையும். ப்: சந்தி. பெருமை-பெருமையையும் பெற்ற. ஏயர்குல-ஏயர் சாதியிற் பிறந்த, ப், சந்தி. பெருமானும்-பெருமகனும்; என்றது. ஏயர்குலக் கலிக்காம நாயனாரை. தம்-தம்முடைய. சால்புசான்றாண்மை. நிறை-நிறைந்த சுற்றம்-உறவினர்கள்; , திணை மயக்கம். தலை-தம்முடைய திருமாளிகையாகிய இடத்திற்கு. நிறைய-நிறைந்து வந்து சேர. முரசு-முரசம். இயம்ப-முழங்க, மஞ்சு-மேகங்கள்: ஒருமை பன்மை மயக்கம ஆலும்-தவழும். மலர்-மலர்கள் மலர்ந்த மரங்கள் வளர்ந்து நிற்கும்; ஒருமை பன்மை மயக்கம். ச்: சந்தி. சோலை-பூம் பொழிலைப் பெற்ற க், சந்தி, கஞ்சாற்றின்-கஞ்சாறுாரின். மருங்கு-பக்கத்தை, அணைய-அடைய. - . . .