பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ö御2 - - பெரிய புராண விளக்கம்-4

பயந்தார்தம்-பெற்றவர்களாகிய மானக் கஞ்சாற நாயனார், அவருடைய பத்தினியார் ஆகிய இருவரும் வாழும்; ஒருமை. பன்மை மயக்கம். தம்: அசை நிலை. திருமனையில்-அழகிய திருமாளிகையில். ஒருவழி-ஒருவழியாக. ஏ. அசை நிலை. தெள்ளு-தெளிவாக உள்ள திரை-கடல் அலைகளின் ஒருமை. பன்மை மயக்கம். நீர்-நீர் சூழ்ந்த உலகம்-இந்த உலகத்தில் வாழும் மக்கள்; இட ஆகு பெயர். உய்வதற்கு-உஜ் ஜீவனத்தை அடையும் பொருட்டு. மற்று: அசை நிலை. அவர்தம்-அந்த மானக் கஞ்சாற நாயனாருடைய தம்: அசை நிலை. உள்ள திருவுள்ளத்தில். நிலை-நி ைல பேற்றை உடைய. ப்: சந்தி. பொருள்-பரம்பொருள். ஆய-ஆகிய. உம் பர்-தேவர்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். பிரான்தாம்-தலைவராகிய சிவபெருமானார். தாம்: அசை நிலை. அணைவார்-அடைவாரானார். -

பிறகு உள்ள 22-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'திரிபுண்டரமாக அணிந்த திருநீறு நிறைந்த தம்முடைய திருதுதலுக்குமேல் முண்டனம் செய்த அழகிய தலையில் வைத்துக் கொண்ட குடுமியின் உச்சியில் கோவையாகக் கோத்து அணிந்து கொண்டிருந்த எலும்பு மணிகளும் பழைய காலத்தில் ஒப்பற்றவனாகிய திருமாலினுடைய திருமேனியில் உள்ள எலும்புகளைத் தரித்துக் கொண்ட காலத்தில் அந்த எலும்புகளைக் கடைந்து எடுத்த வெண் முத்துக்கனைப் போலத் தம்முடைய திருச்செவிகளின் மேல் ஆடுகின்ற குண்டலங்களும்.' பாடல் வருமாறு: . . - ! - முண்டநிறை நெற்றியின்மேல் முண்டித்த திருமுடியில்

கொண்டசிகை முச்சியின்கண் கோத்தணிந்த எற்புமணி. பண்டொருவன் உடல்அங்கம் பரித்த நாள்

- அதுகடைந்த வெண்டரளம் எனக்காதின் மிசை அசையும் -

• o, குண்டலமும்.' இந்தப் பாடல் குளகம். முண்டம்-திரிபுண்டரமாக அணிந்த திருநீறு. நிறை-நிறைந்த நெற்றியின் மேல்