பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம் 393

தம்முடைய திருதுதலுக்கு மேல். முண்டித்த-rவரம்செய்து கொண்ட திரு.அழகிய முடியில்-தலையில். கொண்டவைத்துக்கொண்ட சிகை-குடுமியின். மு. ச் சி யி ன் க ண்உச்சியில். கோத்து அணிந்த-கோவையாகக் கோத்து அணிந்து கொண்டிருந்த எற்பு-எலும்பு. மணி-மணிகளும்; ஒருமை பன்மை மயக்கம். பண்டு-பழைய காலத்தில். ஒருவன்-ஒப்பற்றவனாகிய தி ரு மா வி னு ைட ய. உடல்திருமேனியில் உள்ள. அங்கம்-எலும்புகளை ஒருமை பன்மை மயக்கம், பரித்த-தரித்துக் கொண்ட நாள்-காலத்தில், அதுஅந்த எலும்புகளை ஒருமை பன்மை மயக்கம். கடைந்தகடைந்து எடுத்த. வெண்-வெண்மையான. தரளம்-முத்துக் கள்; ஒருமை பன்மை மயக்கம். என-என்று கூறும் வண்ணம் : இடைக்குறை. க்சந்தி. காதின்-தம்முடைய திருச்செவிகளின்; ஒருமை பன்மை மயக்கம். மிசை-மேல். அசையும் ஆடும். குண்டலமும்-குண்டலங்களும்; ஒருமை பன்மை மயக்கம்.

அடுத்து வரும் 23-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

அந்த எலும்புகளினுடைய ஒளியை வீசும் மணிகளைக் கோவையாகக் கோத்து அணிந்து கொண்ட அழகிய தொங்கும் வடமும், படத்தை உடைய வலிமையைக் கொண்ட பெரிய பாம்பு இல்லாமல் இருக்கத் தம்முடைய தோளில் அணியும் யோகப் பட்டையும், மையைப் போல் அமைந்த நிறத்தைக் கொண்ட மயிரால் வடமாகச் செய்யப் பெற்ற பூணுரலும் திருவுள்ளம் செம்மையாக உள்ள பக்தர்களின் பிறப்பைப் போக்கும் திருநீற்றுப்பையும்." பாடல் வருமாறு: - :

அவ்வென்பின் ஒளிமணிகோத் தணிந்ததிருத் தாழ்

- வடமும் பைவன்பே ரரவொழியத் தோளில் இடும் பட்டிகையும் மைவந்த கிறக்கேச வடப்பூணு நூலும்மனச் செவ்வன்பர் பவம்மாற்றும் திருநீற்றுப்

பொக்கணமும் .'