பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 - - பெரிய புராண விளக்கம்-4

இந்தப் பாடலும் குளகம். அவ்வென்பின்-அந்த எலும்பு களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். ஒளி-ஒளியை வீசும். மணி-மணிகளை ஒருமை பன்மை மயக்கம். கோத்துகோவையாகக் கோத்து. அணிந்த-அணிந்து கொண்ட, திருஅழகிய. த், சந்தி. தாழ்வடமும்-த்ொங்கும் வடமும், பைபடங்களைக் கொண்ட ஒருமை பன்மை மயக்கம். வன்-வலி மையைப் பெற்ற பேர்-பெரிய. அரவு-பாம்புகள்; ஒருமை பன்மை மயக்கம். ஒழிய இல்லாமல் தவிர்ந்திருக்க. த்: சந்தி. தோளில்-தம்முடைய தோளில், இடும்-அணியும்.பட்டிகையும் -யோகப் பட்டையும். மை-மையைப் போல. வந்த-அமைந்த. நிற-நிறத்தைக் கொண்ட க்: சந்தி. கேச-மயிரால். வடவடமாகச் செய்யப் பெற்ற, பூனுநூலும்-பூணுாலும். மனம்தம்முடைய திருவுள் ளங்களில்; ஒருமை பன்மை மயக்கம். செவ் அன்பர்-செம்மையாக உள்ள பக்தர்களிடைய, ஒருமை பன்மை மயக்கம். பவம்-பிறப்பை. மாற்றும்-போக்கும். திருநீற்றுப் பொக்கணமும்-விபூதிப் பையும்.

பிறகு உள்ள 24-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'ஒப்பற்ற தம்முடைய திருக்கரத்தின் முன்பு தனியான மாணிக்கத்தைக் கோவையாகக் கோத்து அணிந்துள்ள ஒளியை வீசும் கயிறும், பொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள வேதமாகிய சாத்திர மென்னும் கெள பீனத்தின்மேல் அசைகின்ற அழகிய ஆடையும் பெரிய தரையின் மேற்படிந்த எழுதுவதற்கு அருமையாக உள்ள திருவடிகளும் அந்தத் திருவடிகளில் அழகிய பதுமம், சங்கம், மகரம், சக்கரம், தண்டம் என்னும் ஐந்து முத்திரைகளும் பொலிந்து விளங்க. பாடல் வருமாறு:

" ஒருமுன்கைத் தனிமன்னிகோத் தணிந்தஒளிர் சூத்திரமும்

அருமறைநூற் கோவணத்தின் மிசை அசையும்

- - திருவுடையும் இருகிலத்தின் மிசைதோய்ந்த எழுதரிய திருவடியும்

திருவடியில் திருப்பஞ்ச முத்திரையும் திகழ்ந்திலங்க .'