பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம் 395

இந்தப் பாடலும் குளகம். ஒரு-ஒப்பற்ற முன்கை-திருக் கரத்தின் முன்பு, த், சந்தி. தனி-தனியான. மணி-மாணிக் கத்தை. கோத்து-கோவையாகக் கோத்து. அணிந்தஅணிந்துள்ள. ஒளிர்-ஒளியை வீசும். சூத்தி மும்-கயிறும். அரு-பொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள. மறை-வேதமாகிய, நூல்-சாத்திரம் என்னும். கோவணத்தின் -கெளபீனத்தின். மிசை-மேல், அசையும்.அசைந்து கொண்டி ருக்கும். திரு.அழகிய. உடையும்-ஆடையும். இரு-பெரிய. நிலத்தின் - தரையின். மிசை-மேல் தோய்ந்த-படிந்த. எழுதரிய-எழுதுவதற்கு அருமையாக உள்ள திருவடியும்திருவடிகளும்; ஒருமை பன்மை மயக்கம். திருவடியில்அந்தத் திருவடிகளில் ஒருமை பன்மை மயக்கம். திருஅழகிய. ப்: சந்தி. பஞ்சமுத்திரையும்-பதுமம், சங்கம், மகரம், சக்கரம், தண்டம் என்னும் ஐந்து முத்திரைகளும். முத்திரையும்: ஒருமை பன்மை மயக்கம். திகழ்ந்து-தோற்றப் பொலிவைப் பெற்று. இலங்க-விளங்க.

பிறகு உள்ள 25-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'அந்த மாவிரத முனிவர் சாம்பல் மூடியுள்ள நெருப்பு என்று கூறுமாறு தம்முடைய திருமேனியில் விளங்கிய உருவம் நீளமாக உள்ள விபூதியின் பரவலை அணிந்துள்ள தன்மையை உடையவராய், துவசங்கள் உயரமாகப் பறக்கும் மாளிகைகள் ஓங்கி நிற்கும் தெருவை அடைந்து தம்முடைய குளிர்ச்சியைப் பெற்ற செந்தாமரை மலர்களைப் போன்ற திருவடிகளை நெடுங்காலமாக வணங்கும் திருவுள்ளத்தைப் பெற்ற பக்தராகிய மானக் கஞ்சாற நாயனாருடைய திரு மாளிகையின் உள்ளே நுழைந்தார். பாடல் வருமாறு:

பொடிமூடு தழல் என்னத் திருமேனி தனிற்பொலிந்த படிநீடு திருநீற்றின் பரப்பணிந்த பான்மையராய்க் கொடிடுே மறுகணைந்து தம்முடைய குளிர்கமலத் தடிநீடும் மனத்தன்பர் தம்மனையின் அகம்புகுந்தார் .' பொடி-அநத மாவிரத முனிவர் சாம்பல். மூடுமூடியுள்ள. தழல்-நெருப்பு. என்ன-என்று கூறுமாறு. த்: சந்தி. திருமேனிதனில்-தம்முடைய திருமேனியில், தன்: