பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 பெரிய புராண விளக்கம்

அசை நிலை. பொலிந்த-விளங்கிய படி-உருவம். நீடுநீள்மாக உள்ள. திருநீற்றின்-விபூதியின். பரப்பு-பரவலை. அணிந்த-பூசியுள்ள பான்மையராய்-தன்மையை உடைய வராய். க்: சந்தி. கொடி-துவசங்கள் ஒருமை பன்மை மயக்கம். நீடு-உயரமாகப் பறக்கும் திருமாளிகைகள் ஓங்கி நிற்கும். மறுகு-ஒரு தெருவை. அணைந்து-அடைந்து. "தமமுடைய என்றது அந்த மாவிரத முனிவருடைய என்பதை. குளிர்-குளிர்ச்சியைப் பெற்ற, கமலத்து-செந் தாமரை மலர்களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம். அடி-திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். நீடும்-- நெடுங்காலமாக வணங்கும். மனத்து-திருவுள்ளத்தைப் பெற்ற, அன்பர்தம்-பக்தராகிய மானக் கஞ்சாற நாய னாருடைய. தம்: அசை நிலை. மனையின்-திருமாளி கைக்கு. அகம்-உள்ளே. புகுந்தார்.நுழைந்தார்.

பிறகு உள்ள 26-ஆம் பாடலின் கருத்து வருமாறு :

'அவ்வாறு தம்முடைய திருமாளிகைக்கு எழுந்தருளி வந்து சேர்ந்த மாவிரத முனிவரைப் பார்த்து அவருக்கு எதிரில் எ ழு ந் து சென்று தம்முடைய திருவுள்ளத்தில் களிப்பை மிகுதியாக அடைந்து ம கி ழ் ச் சி யி ல் சிறந்து விளங்கிய பெருமையைப் பெற்ற திருத் தொண்டராகிய மானக் கஞ்சாற நாயனார், 'அடியேனுடைய தந்தையைப் போன்ற தலைவராகிய தேவரீர் அடியேன் முற்பிறப்பில் செய்த தவத்தின் பயனாகத் தேவரீர் நினைத்த இந்த இடத் திற்கு எழுந்தருளியதனால் அடியேன் உ ஜ் ஜீ வ ன த் ைத அடைந்து அடியேனுடைய பாவங்களிலிருந்து நீங்கப் பெற்றேன்' என உருக்கத்தை அடைந்த பக்தியோடு அந்த முனிவரை வணங்கினார். பர்டல் வருமாறு :

வந்தணைந்த மாவிரத முனிவரைக்கண் டெதிரெழுந்து : சிந்தைகளி கூர்ந்துமகிழ் சிறந்தபெருந் தொண்டனார் 'எந்தைபிரான் புரிதவத்தோர் இவ்விடத்தே எழுந்தருள உய்ந்தொழிந்தேன் அடியேன்." என்றுருகிய அன்பொடு: - - - . பணிந்தார்.'