பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம் 397

வந்து அவ்வாறு தம்முடைய தி ரு மாளி ைகீ க்கு எழுந்தருளி வந்து. அணைந்த-சேர்ந்த மாவிரதமுனிவரைஅந்த மாவிரத முனிவரை. க், சந்தி. கண்டு-பார்த்து. எதிர்அவருக்கு எதிரில். எழுந்து-எழுந்து சென்று. சிந்தை-தம் முடைய திருவுள்ளத்தில், களி-களிப்பை. கூர்ந்து-மிகுதியாக அடைந்து. மகிழ்-மகிழ்ச்சியில்; முதல் நிலைத் தொழிற் பெயர். சிறந்த-சிறந்து விளங்கிய பெரும்-பெருமையைப் பெற்ற, தொண்டனார்-திருத்தொண்டராகிய மானக் கஞ்சாற நாயனார். எந்தை-அடியேனுடைய தந்தையைப் போன்ற பிரான்-தலைவராகிய தேவரீர்; ஒருமை பன்மை மயக்கம். புரி-அடியேன் முற்பிறப்பில் செய்த. தவத்து-தவத் தின் பயனாக ஆகு பெயர். ஒர்-தேவரீர் நினைத்த. இவ் விடத்து-இந்த இடத்திற்கு ஏ: அசை நிலை. எழுந்தருளஎழுந்தருளியதனால், அடியேன் உய்ந்து-அடியேன் உஜ்ஜீ வனத்தை அடைந்து. ஒழிந்தேன்-அடியேனுடைய பாவங் .களிலிருந்து நீங்கப் பெற்றேன். என்று-என. உருகிய-உருக் கத்தை அடைந்த அன்பொடு-பக்தியோடு.பணிந்தார்-அந்த

முனிவரை மானக் கஞ்சாற நாயனார் வணங்கினார்.

பின்பு உள்ள 27-ம் கவியின் உள்ளுறை வருமாறு :

'நல்ல தவசியாராகும் பெருமகனாராகிய அந்த மாவிரத முனிவர் நல்ல பண்புகள் மிகுதியாக அமைந்திருக்கும் பக்த ராகிய மானக் கஞ்சாற நாயனாரைப் பார்த்து, 'உண்டான ஒரு மங்கல காசியம் உன்னுடைய இந்தத் திருமாளிகையில் நடப்பது என்ன?’ என்று கேட்க, 'அடியேன் பெற்றெடுத்த ஒப்பற்ற பூங்கொடியைப் போன்ற புதல்வியினுடைய திரு. மணம்' என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்ய, பெருமை யைப் பெற்ற அந்தத் தவசியாரும், 'உமக்குச் சோபனம் உண்டாகுக !' எனத் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.' பாடல் வருமாறு : - - கற்றவராம் பெருமகனார் கலம்மிகும் அன்பரை நோக்கி "உற்றசெயல் மங்கலம் இங் கொழுகுவதென்?" என, - ‘அடியேன்