பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 பெரிய புராண விளக்கம்-42

பெற்றதொரு பெண்கொடிதன் வதுவை' எனப்

பெருந்தவரும் மற்றுமக்குச் சோபன்ம்ஆ குவ தென்று

- வாய்மொழிந்தார்." நல்-நல்ல. தவராம்-தவசியாராக விளங்கும். பெரு மகனார்-பெருமகனாராகிய அந்த மாவிரத முனிவர். நலம்நல்ல பண்புகள்: ஒருமை பன்மை மயக்கம். மிகும்-மிகுதியாக அமைந்திருக்கும். அன்பரை-பக்தராகிய மானக் கஞ்சாற: நாயனாரை. நோக்கி-பார்த்து. உற்ற-உண்டாகிய, செயல்: மங்கலம்-ஒரு மங்கல காரியம். இங்கு-உன்னுடைய இந்தத்திருமாளிகையில். ஒழுகுவது-நடப்பது. என்-என்ன. எனஎன்று கேட்க: இடைக்குறை. அடியேன் பெற்றது ஒருஅடியேன் பெற்றெடுத்தவளாகிய ஒப்பற்ற பெற்றது. திண்ை. மயக்கம். பெண்கொடி தன்-பூங்கொடியைப் போன்ற புதல்வியினுடைய. கொடி உவம ஆகு பெயர். மகளிருக்குப் பூங்கொடியை உவமையாகக் கூறும் இடங்களை முன்பே ஓரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. தன்: அசை நிலை. வதுவை-திருமணம் என-என்று திருவாய் மலர்ந்: தருளிச் செய்ய; இடைக்குறை. ப்: சந்தி. பெரும்-பெருமை. யைப் பெற்று விளங்கும். தவரும்-அந்தத் தவசியாரும். மற்று: அசை நிலை. உமக்கு-உங்களுக்கு. சோபனம் ஆகுவதுசோபனம் உண்டாகுக. என்று-என வாய்மொழிந்தார். திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். - - அடுத்து உள்ள 28-ஆம் பாடலின் கருத்து வருமாறு: d 'சிவஞானத்தைப் பெற்ற செம்மையை உடைய தவசியாராகிய அந்த மாவிரத முனிவருடைய திருவடிகளின் மேல் விழுந்து அவரை வணங்கி விட்டுத் தம்முடைய திரு மாளிகைக்கு உள்ளே சென்று அந்த மானக் கஞ்சாற. நாயனார் திருமணக் கோலத்தைப் பூண்டு கொண்டிருந்த தேன் விளங்கிய மலர்களை அணிந்த கூந்தலைப் பெற்ற தம்முடைய அழகிய புதல்வியை அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்து நீலோற்பல மலரைப் போன்ற திருக்கழுத்தை