பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 - பெரிய புராண விளக்கம்-4

அந்தப் பெண்மணியினுடைய மேகம் தழைத்தாற் போல வளர்ந்துள்ளதும் மலர்களை அணிந்துள்ளதுமாகிய கூந்தலை வெளியில் பார்த்தருளி தம்முடைய கைகளைக் கூப்பி அஞ்சலி புரிந்த உண்மையான திருத்தொண்டராகிய மானக் கஞ்சாற நாயனாரை அந்த முனிவர் நோக்கி, தெய்வப் பெண்ணைப் போன்ற இவளுடைய கூந்தலில் அடர்ந்து வளர்ந்திருக்கும் மயிர்கள் எமக்குப் பஞ்ச வடிக்கு ஆகும்' என்று தம்மைத் துதித்துப் புகழ அவ்வாறு புகழ்ந்த பக்தர்களுக்குத் தம் முடைய திருவடிகளாகிய புகலிடத்தை வழங்குபவராகிய சிவபெருமானார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பாடல் வருமாறு: -

தம் சரணத் திடைப்பணிந்து தாழ்ந்தெழுந்த மடக்

- கொடிதன் மஞ்சுதழைத் தெனவளர்ந்த மலர்க்கூந்தல் புறம்நோக்கி அஞ்சலிமெய்த் தொண்டரைப்பார்த், தணங்கிவள் தன் - மயிர்நமக்குப் பஞ்சவடிக் காம்,' என்றார் பரவ அடித்தலம்

- - கொடுப்பார்." தம்-அந்த மாவிரத முனிவர் தம்முடைய. சரணத் திடை-திருவடிகளின் மேல்: ஒருமை பன்மை மயக்கம். ப்: (சந்தி. பணிந்து-தரையில் விழுந்து வணங்கி, எழுந்த-எழுந் திருந்த மடக்கொடிதன்-மடப்பத்தையும் பூங்கொடியைப் போன்ற தோற்றப் பொலிவையும் பெற்ற அந்தப் பெண் மணியினுடைய கொடி உவம ஆகு பெயர். தன்; அசை 'நிலை. மஞ்சு-மேகம், தழைத்தென தழைத்தாற்போல. என: இடைக்குறை. வ ள ர் ந் த-வளர்ந்துள்ளதும்; வினை பாலணையும் பெயர். மலர்-மலர்களை அணிந்துள்ளது மாகிய, ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி. கூந்தல்கூந்தலை. புறம்-வெளியில். நோக்கிபார்த்தருளி. அஞ்சலிதம்முடைய கைகளைக் கூப்பி அஞ்சலி புரிந்த மெய்உண்மையான. த், ச ந் தி. தொண்டரை-திருத்தொண்ட ராகிய மானக் கஞ்சாற நாயனாரை. ப், சந்தி. பார்த்து