பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம் 401.

அந்த முனிவர் நோக்கி. அணங்கு-தெய்வப் பெண்ணைப் போன்ற இவள் தன் இவளுடைய தன் : அசை நிலை. மயிர்-கூந்தலில் அடர்ந்து வளர்ந்திருக்கும் ம்யிர்கள் ஒருமை பன்மை மயக்கம். நமக்கு-எமக்கு. ப்: சந்தி. பஞ்சவடிக்குமயிரால் அகலமாகச் செய்யப் பெற்று மார்பில் பூணுாலாக அணியும் வடத்திற்கு பஞ்சம்-விரிவு: அகலம். வடி-வடம். ஆம்-ஆகும். பரவ-தம்மைத் துதித்துப் புகழ. அடித்தலம். அவ்வாறு பு. க ழ் ந் த பக்தர்களுக்குத் தம்முடைய திருவடி களாகிய புகலிடத்தை அடி: ஒருமை பன்மை மயக்கம். கொடுப்பார்-வழங்கியருள்பவராகிய சிவ பெருமானார். என்றார்-என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பெண் மணிக்குப் பூங்கொடியை உவமானமாகச் சொல்லும் இடங் களை வேறோரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. பெண்மணியின் கூந்தலுக்கு மேகத்தை உவமையாகக் கூறும் இடங்களைப் பிறிதோரிடத்தில் காட்டினோம்; ஆண்டுக் கண்டுணர்க.

பிறகு உள்ள 30-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

'அவ்வாறு அந்த மாவிரதமுனிவர் திருவாய் மலர்ந்: தருளிச் செய்த வார்த்தைகளை மானக் கஞ்சாற நாயனார். கேட்டுத் தம்முடைய வலிமையைப் பெற்ற உடைவாளை இடையிலிருந்து உருவி எடுத்து, 'செல்வத்தை ஈட்டினோம் என்று கூறுமாறு ஒரு பாக்கியத்தை அடியேன் பெற்றேன்' என்று த ம் மு ைட ய திருவுள்ளத்தில் எண்ணிக்கொண்டு மலர்க்கொடியைப் போன்ற தம்முடைய புதல்வியின் இருட்டைப்போல கருமையை உண்டாக்கிய கூந்தலை அதனுடைய அடியோடு அறுத்து எடுத்துத் தம்முடைய - எதிரில் நின்று கொண்டிருந்த மயக்கத்தை உண்டாக்கிய இந்த மனிதப் பிறவியைப் போக்குபவராகிய அந்த முனி வருடைய செந்தாமரை மலரைப் போன்ற வலக்கரத்தில் அளிக்க. பாடல் வருமாறு : - :

பே.-4-26