பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 பெரிய புராண விளக்கம்-4

அருள்செய்த மொழிகேளா அடற்சுரிகை தனை உருவிப் பொருள்செய்தாம் எனப்பெற்றேன்" எனக்கொண்டு

r பூங்கொடிதன் இருள்செய்த கருங்கூந்தல் அடியில்அளிக் தெதிர்கின்ற மருள்செய்த பிறப்பறுப்பார் மலர்க்கரத்தி னிடை

- - நீட்ட !

இந்தப் பாடல் குளகம். அருள் செய்த-அவ்வாறு அந்த மாவிரத முனிவர் திருவாய் மலர்ந்தருளிச் செய்த, மொழி-வார்த்தைகளை ஒருமை பன்மை மயக்கம். கேளா. மானக் கஞ்சாற நாயனார் கேட்டருளி. அடல்-தம்முடைய வலிமையைப் பெற்ற; கொல்லுதலை உடைய' எனலும் ஆம். சுரிகைதனை-உடைவாளை தன்: அசை நிலை. உருவி-தம்முடைய இடையிலிருந்து உருவி எடுத்து. ப்: சந்தி, பொருள்-செல்வத்தை. செய்தாம். ஈட்டினோம். என-என்று கூறுமாறு இடைக்குறை. ப்: சந்தி பெற்றேன்ஒரு பாக்கியத்தை அடியேன் அடைந்தேன். என-என்று; இடைக்குறை. க், சந்தி. கொண்டு-தம்முடைய திருவுள் ளத்தில் எண்ணிக் கொண்டு. பூங்கொடிதன்.மலர்க் கொடியைப் போன்ற தம்முடைய புதல்வியின். தன்: அசை நிலை. இருள் செய்தகரும்-இருட்டைப்போலக் கருமையை உண்டாக்கிய கூந்தல்-கூந்தலை அடியில்-அதனுடைய அடியோடு: உருபு மயக்கம். அரிந்து-எடுத்து. எதிர்தம்முடைய எதிரில், நின்ற-நின்று கொண்டிருந்த மருள். மயக்கத்தை. செய்த-உண்டாக்கிய, பிறப்பு:இந்த மனிதப் 'பிறவியை. அறுப்பார்-போக்குபவராகிய அந்த முனி வருடைய மலர்-செந்தாமரை மலரைப் போன்ற, க்: சந்தி, கரத்தினிடை-வலக் கரத்தில். நீட்ட-அளிக்க.

அடுத்து வரும் 31-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அவ்வாறு மானக் கஞ்சாற நாயனார் தம்முடைய :புதல்வியின் கூந்தலை அறுத்துத் தந்த மயிர்களை வாங்கிக் கொள்பவரைப் போல அங்கே நின்று கொண்டிருந்த