பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம் 403

வேதங்களின் அர்த்தமாகும் அந்த மாவிரத முனிவர் மறைந் தருளித் தம்முடைய வாமபாகத்தில் எழுந்தருளியிருக்கும் இமாசல அரசனுடைய புதல்வியாகிய பூங்கொடியைப் போன்ற பார்வதி தேவியோடு பழமையாகிய இளமையைப் பெற்ற இடப வாகனத்தின் மேல் ஏறிக்கொண்டு உயர மாக உள்ள வானத்தின் மேல் எழுந்தருளி வந்தார்; ஒளியை வீசும் வானத்திலிருந்து தரையில் நெருங்கும் வண்ணம் தேவர்கள் கற்பக மரத்திலிருந்து கொய்த பொன் மலரின் மழை பொழிந்தது; திருத்தொண்டராகிய மானக் கஞ்சாற நாயனார் அவ்வாறு காட்சி அளித்த சிவபெரு மானாரை வணங்கி அவருடைய எதிரில் தரையில் விழுந்தார். பாடல் வருமாறு: - -

வாங்குவார் போல்கின்ற மறைப்பொருளாம் -

- அவர்மறைந்து பாங்கின்மலை வல்லியுடன் பழையமழ விடைஏறி ஓங்கியவிண் மிசைவந்தார்; ஒளிவிசும்பின்

- கிலன்கெருங்கத் தூங்கிய பொன் மலர்மாரி, தொழும்பர்தொழு

தெதிர்விழுந்தார் .' வாங்குவார் போல், - அவ்வாறு மானக் கஞ்சாற நாயனார் தம்முடைய புதல்வியின் கூந்தலை அறுத்துத் தந்த மயிர்களை வாங்கிக் கொள்பவரைப் போல. நின்றஅங்கே நின்று கொண்டிருந்த, மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி, பொருளாம்-அர்த்தமாக விளங்கும். அவர்-அந்த மாவிரத முனிவராக எழுந்தருளி வந்த சிவபெருமானார். சிவபெருமானார் வேதங்களின் பொருளாக விளங்குகிறவர் என்ற கருத்தைப் புலப்படுத்தும் இடங்களை வேறோ ரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. மறைந்துமறைந்தருளி பாங்கின்-தம்முட்ைய வாமப்ாகத்தில் எழுந் தருளியிருக்கும். மலை வல்லியுடன்-இமாசல அரசனுடைய