பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 - பெரிய புராண விளக்கம்-4

புதல்வியாகிய பூங்கொடியைப் போன்ற பார்வதி: தேவியோடு. மலை: திணை மயக்கம். வல்லி: உவம ஆகுபெயர். பழைய-பழமையாகிய, மழ-இளமையைப் பெற்ற, விடை-இடப வாகனத்தின் மேல். ஏறி-ஏறிக் கொண்டு. ஓங்கிய உயரமாக உள்ள. வி ன் மி ைசவானத்தின் மேல். வந்தார்-எழுந்தருளி வந்தார். ஒளிஒளியை வீசும். விசும்பின் வானத்திலிருந்து. நிலன்தரையில், நெருங்க-நெருங்கிப் பரவும் வண்ணம். த்: சந்தி. பொன்மலர் மாரி-தேவர்கள் கற்பக மரத்திலிருந்து கொய்த தங்க மலர்களின் மழைகள். மலர்: ஒருமை பன்மை மயக்கம். மாரி ஒருமை பன்மை மயக்கம். தூங்கியபொழிந்தன. தொழும்பர்-திருத்தொண்டராகிய மானக் கஞ்சாற நாயனார். தொழுது-அவ்வாறு காட்சி அளித்து. சிவபெருமானாரை வணங்கி, எதிர்-அவருடைய எதிரில். விழுந்தார்-தரையில் விழுந்தார்.

அடுத்துள்ள 2ே-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அவ்வாறு தரையில் விழுந்து பிறகு தரையிலிருந்து: நின்று கொண்டு தம்முடைய திருமேனியை மறந்து போன உண்மையான பக்தராகிய மானக் கஞ்சாற நாயனாருக்குத் தம்முடைய தலையின் மேல் உள்ள சடாபார்த்தில் பிறைச் சந்திரனுடைய கொழுந்து அசையவும், அங்கே தங்கும் கங்கையாறு குதித்துக் கொண்டு திருநடனம் புரியவும், சிதம் பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம் பலத்தில் திருநடனம் புரிந்தருளும் நடராஜப் பெருமானார், 'உன்னுடைய உள்ளத்தில் எழுந்த பக்தி நம்மிடம் உனக்கு இருந்த இயல்பை இந்தச் செழுமையைப் பெற்ற உலகங் களில் ஏறிப் பரவுமாறு புரிந்தோம்.' என்று திருவாய் மலர்ந்: தருளிச் செய்தார். பாடல் வருமாறு:

விழுக்தெழுந்து மெய்ம்மறந்த மெய்யன்பர் தமக்குமதிக் கொழுந்தலைய விழும் கங்கை குதித்த சடைக் - - - கூத்தனார்,