பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 . - பெரிய புராண விளக்கம்- 4:

வைத்துக் கூப்பிக் கும்பிட்டு ஐயராகிய நடராஜப் பெரு. மானாருடைய பெருமையைப் பெற்ற கருணையின் விதத்தை வாழ்த்தும் பெரிய பாக்கியத்தை நேரில் அடைந்தார். பாடல் வருமாறு:

மருங்குபெரும் கணநாதர் போற்றிசைப்ப வானவர்கள் நெருங்கவிடை மேற்கொண்டு கின்றவர்முன்

- கின்றவர்தாம். ஒருங்கியகெஞ் சொடுகரங்கள் உச்சியின்மேற்

- குவித்தையர் பெருங்கருணைத் திறம்போற்றும் பெரும்பேறு - - கேர்பெற்றார் .' மருங்கு-தம்முடைய பக்கத்தில். பெரும்-பெருமையைப் பெற்று விளங்கும். கண-சிவகணங்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம், நாதர்-தலைவர்கள்; ஒருமை பன்மை: மயக்கம். போற்று-வாழ்த்துக்களை ஒருமை பன்மை மயக்கம், இசைப்ப-எடுத்துக் கூறவும். வானவர்கள்-தேவ. லோகத்தில் வாழும் தேவர்கள். நெருங்க-தம்மோடு நெருங்கி வர. விடைமேல்-இடப வாகனத்தின் மேல். கொண்டு-ஏறிக்கொண்டு. நின்றவர்-நின்று கொண்டிருந்த வராகிய நடராஜப் பெருமானாருடைய. முன்-முன்னி லையில். நின்றவர்தாம்-நின்று கொண்டிருந்தவராகிய மானக் கஞ்சாற நாயனார். தாம்: அசை நிலை. ஒருங்கியஒருமைப்பாடு பொருந்திய, நெஞ்சொடு-திருவுள்ளத்தோடு, கரங்கள்-தம்முடைய திருக்கரங்களை, உச்சியின் மேல்தம்முடைய தலையின் மேல். குவித்து-வைத்துக் கூப்பிக் கும்பிட்டு. ஐயர்-ஐயராகிய நடராஜப் பெருமானாருடைய. 'ஐயர்' என்பதைக் காட்டும் இடங்களை முன்பே ஒரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. பெரும்-பெருமையைப் பெற்றிருக்கும். கருணை-கருணையின். த், சந்தி. திறம் விதத்தை. போற்றும்-வாழ்த்தும். பெரும்-பெரியதாக இருக்கும். பேறு-பாக்கியத்தை. நேர்-நேரில். பெற்றார்அடைந்தார். . . . - *