பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம் - 407

அடுத்து உள்ள 34-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

- 'திருத்தொண்டராகிய மானக் கஞ்சாற நாய னாருக்குத் தம்முடைய திருவருளை வழங்கி விட்டுத் தம்மைச் சுற்றிக் கொண்டு தேவர்கள் தோத்திரங்களைப் புரிய இண்டை மலரைச் சூடிய நீண்ட சடாபாரத்தைப் பெற்ற திருமுடியைக் கொண்ட நடராஜப் பெருமானார் அந்த இடத்திலிருந்து எழுந்தருளிச் சென்றார்: வண்டுகள் மொய்க்கும் மலர்களை அணிந்த நீண்ட கூந்தலைப் பெற்ற பூங்கொடி போன்ற மானக் கஞ்சாற நாயனாருடைய புதல்வியைக் கையிற் பற்றிக்கொள்ள மேற்கொண்ட திருமணக் கோலத்தைப் பார்த்த மக்களுடைய கண்கள் மகிழ்ச்சியை அடையுமாறு ஏயர்கோன் கலிக்காம நாயனார் மானக் கஞ்சாற நாயனாருடைய திருமாளி கைக்குள் நுழைந்தார். பாடல் வருமாறு:

தொண்டனார் தமக்கருளிச் சூழ்ந்திமையோர்

துதிசெய்ய இண்டைவார் சடைமுடியார் எழுந்தருளிப் போயினார்; வண்டுவார் குழற்கொடியைக் கைப்பிடிக்க

மணக்கோலம் கண்டவர்கள் கண்களிப்பக் கலிக்காமனார் - - ...” புகுந்தார்.'

தொண்டனார் தமக்கு-திருத்தொண்டராகிய மானக் கஞ்சாற நாயனாருக்கு. தம்: அசை நிலை. அருளிதம்முடைய திருவருளை வழங்கி விட்டு. ச் சந்தி, சூழ்ந்துதம்மைச் சுற்றிக் கொண்டு. இமையோர்-தேவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். இமையோர்-இமைகளில் கொட்டாமையாகிய சிறப்பை உடையவர்கள். துதிதோத்திரங்களை ஒருமை பன்மை மயக்கம். செய்ய-புரிய, இண்டை-இண்டை ம ல ைர ச் சூ டி ய: ஆகு பெயர். வார்-நீளமான, சடை-சடாபாரத்தைப் பெற்ற முடியார்திருமூடியைக் கொண்ட நடராஜப் பெரும்ானார். எழுத்