பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 பெரிய புராண விளக்கம்-4

தருளி-அந்த இடத்திலிருந்து எழுந்தருளி. ப்: சந்தி. போயினார்-சென்றார். வண்டு-வண்டுகள்; ஒருமை பன்மை மயக்கம். வார்-மொய்க்கும் மலர்களை அணிந்த நீண்ட. குழல்-கூந்தலைப் பெற்ற, கொடியை-பூங்கொடியைப் போன்றவரும் மானக் கஞ்சாற நாயனாருடைய புதல்வியும் ஆகிய பெண்மணியை உவம ஆகுபெயர். க்: சந்தி. கைப் பிடிக்க-கையிற்பற்றிக் கொள்ளும் பொருட்டு மேற்கொண்ட மணக்கோலம்- திருமணக் கோலத்தை. கண்டவர்கள்பார்த்த மக்களுடைய, கண்-கண்களில்; ஒருமை பன்மை மயக்கம். களிப்ப-மகிழ்ச்சியை அடையுமாறு. க், சந்தி. கவிக்காமனார்-ஏயர்கோன் கலிக்காம நாயனார். புகுந்தார்மானக் கஞ்சாற நாயனாருடைய திருமாளிகைக்குள் நுழைந்தார். - -

சிவபெருமான் , இண்டை மலரைச் சூடியிருத்தல்: இண்டை கொண்ட செஞ்சடை முடிச்சிவன்.', 'இண்டை சேர்க்கும் சடைஏடகத் தெந்தையே.', 'இண்டை புனை வுண்ட சடை.', 'இண்டை புனைந் தெருதேறி.” என்று திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரும், இண்டை யைத் திகழ வைத்தார்.', 'இண்டை கொண்டேற நோக்கி.", "இண்டை செஞ்சடை வைத்த இயல் பினான்.', 'இண்டை மாலை புனைந்தும்.', 'இண்டைச் செஞ்சடையன்.', 'இண்டை வண்ணமும்.', 'இண்டை கட்டி இணையடி ஏத்தியும்.', 'இண்டைச் சடை முடியார்.', 'இண்டைச் சடை முடியாய் என்றேன் நானே.”,'இண்டைச் சடை சேர் முடியார் போலும்.’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், இண்டை மலர் கொண்டு., 'இண்டை மாமலர்ச் செஞ்சடையானை.', 'இண்டை கொண்டன்பிடை அறாத தொண்டர் பரவும்.' என்று சுந்தரமூர்த்தி நாயனாரும் பாடியருளியவற்றைக் காண்க.

அடுத்து வரும் 35-ஆம் பாட்டின் கருத்து வருமாறு : 'அ வ்வாறு மானக் கஞ்சாற நாயனாருடைய திரு மாளிகைக்கு வந்து சேர்ந்த ஏயர் குலத்தின் அரசராகிய