பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனாதி நாத நாயனார் புராணம் 43.”

இனிமேல். என்-அடியேன் செய்வதற்கு என்ன இருக்கிறது. அண்டர்.தேவர்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். பிரான்-தலைவனாகிய சிவபெருமானுடைய. சீர்-சீர்த்தி யைப் பெற்ற. அடியார்-அடியவர். ஆயினார்-ஆகிவிட்டார். என்று. என. மனம்-தம்முடைய திருவுள்ளத்தில், கொண்டு. எண்ணிக் கொண்டு. இவர்தம்-இவருடைய. தம்: அசைநிலை. கொள்கை-கொள்கையாகிய, க்: சந்தி. குறிவழி-குறித்த எண்ணத்தின்படி நிற்பேன்-அடியேன் நின்று கொண்டிருப் பேன். என்று-என எண்ணி. -

பிறகு வரும் 38-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

ஏனாதி நாத நாயனார் தம்முடைய கைகளில் ஏந்திக் கொண்டிருந்த வாளாயுதத்தோடு கேடகத்தையும் போக்கி விட முதலில் எண்ணிப் பிறகு அவ்வாறு அந்தச் செயலைப் புரியாதவராகி, ஆயுதம் இல்லாதவரைக் கொலை செய்து விட்டார் என்று பிறர் கூறும் திமையாகிய பழி இவருக்கு வராமல் இருக்க வேண்டும்' என்று எண்ணிக் கருமையான கேடகத்தை எண்ணெயைத் தடவிய வாளாயுதத்தோடு நின்று எதிர்த்து, நேரில் நிற்பவரைப் போல அதிசூரனுக்கு, நேரில் நின்று கொண்டிருந்தார். பாடல் வருமாறு: *

கைவாளுடன் பலகை நீக்கக் கருதி அது செய்யார், கிராயுதரைக் கொன்றார் எனும் தீமை எய்தாமை வேண்டும்.இவர்க் கென்றிரும்பலகை நெய்வாளுடன் அடர்த்து நேர்வார்போல் கேர்கின்றார்.' கை-ஏனாதி நாத நாயனார் தமமுடைய கைகளில் ஏந்திக் கொண்டிருந்த: ஒரு மை பன்மை மயக்கம். வாளுடன்-- வாளாயுதத்தோடு, பலகை-கேடகத்தையும். நீக்க-போக்கி, விட க் சந்தி. கருதி-முதலில் எண்ணி, அது-பிறகு அவ்வாறு அந்தச் செயலை செய்யாா-புரியாதவராகி; முற்றெச்சம். நிராயுதரை-ஒர் ஆ யு த மு ம் இல்லாதவரை. க்: சந்தி. கொன்றார்-கொலை செய்து விட்டார். எனும்-என்று பிறர் கூறும் இடைக்குறை. தீமை-தீமையாகிய பழி.