பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 53

வேடர்கள் ஒருமை பன்மை மயக்கம். கொடும்-வளைந் திருக்கும். செவி-காதுகளைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். ஞமலி-நாயை. ஆர்த்த-கட்டிய. வன்-வலிமை :யான, திரள்-பருத்த அடியைக் கொண்ட விளவின்-விளா மரத்தினுடைய. கோட்டு-கிளையில். வார்-நீளமான வலை மருங்கு-வலையின் பக்கத்தில், துரங்க-தொங்கிக் கொண் டிருக்க. ப்: சந்தி. பன்றியும்-காட்டுப் பன்றியும். புலியும்-புலி என்னும் காட்டு விலங்கும். எண்கும்-கரடியும். கடமையும்காட்டுப் பசுவும். மானின் பார்வை-பார்வை மானும்; இது மற்ற மான்களைப் பிடிக்க உதவுவது. அன்றியும்-இந்த விலங்குகள் திரிந்து கொண்டிருப்பது அல்லாமலும். பாறை முன்றில்-கருங்கற் பாறையாகிய முற்றத்தில். முன்றில்-இல் முன்; முன் பின்னாகத் தொக்க தொகை. ஐவனம்-மலை நெற்கள்: ஒருமை பன்மை மயக்கம். எங்கும்-எந்த இடத் திலும், உணங்கும்-உலர்ந்து கொண்டிருக்கும். -

பிறகு வரும் 4-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: வலிமையாகிய புலிக் குட்டியோடும், வலிமையைப் பெற்ற யானைக் கன்றினோடும் சிவந்த மயிர்களை உடைய தலைகளைப் பெற்ற சிறிய குழந்தைகள் விரும்பிக் கூடி விளையாட்டைப் புரிவதை அல்லாமல், அன்புமிக்க விருப்பம் மிகுதியாக உண்டாக அடைகின்ற பெண்மான்களோடும் இன்பம் உண்டாகுமாறு சேர்ந்து விளையாடும் வேடிச்சி களுடைய பெண்கள் எவ்விடத்திலும் காணப் படுவார்கள்.' பாடல் வருமாறு: - - வன்புலிக் குருளை யோடும் வயக்கரிக் கன்றி

- - - னோடும் புன்றலைச் சிறும கார்கள் புரிந்துடன் ஆட லன்றி அன்புறு காதல் கூர அணையும்மான் பிணைக ளோடும் இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும். '

வன்-வலிமையாகிய, புலிக் குருளையோடும்புலிக்குட்டி யுடனும், வய-வலிமையைப் பெற்ற. க், சந்தி. கரிக்கன்றி