பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பேரிய புராண விளக்கம்-4

என்னில்-என்று கேட்டால், அது வருமாறு. நித்திலமுத்துக்களைக் கொழிக்கும்; ஒருமை பன்மை மயக்கம். அருவி-குதிக்கும் அருவி உள்ள ச்: சந்தி. சாரல் பக்கங். களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். நீள்-உயரமான. வரை-மலை. சூழ்ந்த-சுற்றி அமைந்த, பாங்கர்-பக்கத்தில். மத்த-கன்ன மதம், கபோல மதம், பீஜ மதம் என்னும் மூன்று மதங்களை ஒழுகவிடும்; ஒருமை பன்மை மயக்கம், வெம்கொடிய களிற்று-ஆண் யானைகளினுடைய ஒருமை பன்மை மயக்கம். க், சந்தி. கோட்டு-தந்தங்களினால்: ஒருமை பன்மை மயக்கம். வன்-வலிமையான தொடர்தொடர்ந்திருக்கும். வேலி-வேலியை. கோலி-சுற்றிக் கட்டி. ஒத்த-அந்த வேலியோடு ஒத்துள்ள. பேர்-பெரிய, அரணம்திருமதில். சூழ்ந்த-சுற்றி அமைந்த. முது-பழைய பதி-ஊர். உடுப்பூர் ஆகும்-உடுப்பூர் என்பது ஆகும்.

பிறகு உள்ள 3-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

அந்த உடுப்பூரில் வாழ்பவர்கள் மலைவாசிகளாகிய வேடர்கள்; வளைந்த காதுகளைப் பெற்ற நாயைக் கட்டிய வலிமையைக் கொண்ட திரண்ட விளா மரத்தின் கிளையில் நீண்ட வலை பக்கத்தில் தொங்கிக் கொண்டிருக்கக் காட்டுப் பன்றியும் புலியும் கரடியும் கடமை மானும் மான் என்னும் பார்வை மிருகமும் திரிந்து கொண்டிருப்பதல்லாமலும் கருங்கற் பாறையாகிய முற்றத்தின்மேல் மலைநெற்கள் எந்த இடத்திலும் உலர்ந்து கொண்டிருக்கும். பாடல் வருமாறு: . . . . -

குன்றவர் அதனில் வாழ்வார்; கொடுஞ்செவி ஞமலி.

- ஆர்த்த வன்றிரள் விளவின் கோட்டு வார்வலை மருங்கு துரங்கப் பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும்.' - அதனில்-அந்த உடுப்பூரில். வாழ்வார்-வாழ்பவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். குன்றவர்-மலை வாசிகளாகிய