பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் - 51

மனத்தகத்தான் தலைமேவான் வாக்கின் உள்ளான்

வாயாரத் தன் அடியே பாடும் தொண்டர் இனத்தகத்தான் இமையவர்தம் சிரத்தின் மேலான்

ஏழண்டத் தப்பாவான் இப்பாற் செம்பொன் புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதின் உள்ளான்

பொருப்பிடையான் கெருப்பிடையான் காற்றின்

உள்ளான் கனத்தகத்தான் கயிலாயத் துச்சி உள்ளான்

காளத்தி யான்அவன் என் கண்உ ளானே." இந்தத் தலத்தைப் பற்றி நட்டராகப் பண்ணில் சுந்தர முர்த்தி.நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு : பொய்யவன் காயடியேன் புகலேநெறி ஒன்றறியேன் செய்யவ னாகிவந்திங் கிடர் ஆனவை தீர்த்தவனே மெய்யவ னே திருவே விளங்கும் திருக்காளத்திஎன் ஐயதுன் றன்னை அல்லால் அறிந்தேத்த மாட்டேனே. பிறகு உள்ள 2 ஆம் பாடலின் கருத்து வருமாறு : 'இந்த அழகிய பொத்தப்பி நாட்டில் இந்தக் கண்ணப்ப நாயனார் வாழ்ந்த திருப்பதி எது என்று கேட்டால், முத்துக்களைக் கொழிக்கும் அருவி குதிக்கின்ற சாரல் உயர மாக உள்ள மல்ை சூழ்ந்துள்ள பக்கத்தில், கன்ன மதம், கபோல மதம், பீஜ மதம் என்னும் மூன்று மதங்களை ஒழுகவிடும் ஆண் யானைகளினுடைய தந்தங்களினால் வலிமையான தொடர்ந்துள்ள வேலியைக் கட்டி அதனோடு ஒத்திருக்கும் பெரிய திருமதில் சுற்றி விளங்கும் பழைய ஊர் உடுப்பூர் என்பது ஆகும். பாடல் வருமாறு: .."இத்திரு நாடு தன்னில் இவர் திருப் பதியா தென்னில்

கித்தில அருவிச் சாரல் நீள்வரை சூழ்ந்த பாங்கர் - - மத்தவெம் களிற்றுக் கோட்டு வன்றொடர் வேலி கோல் ஒத்தபேர் அரணம் சூழ்ந்த முதுபதி உடுப்பூர் ஆகும்:

இத்திரு-இந்த அழகிய நாடு, தன்னில் - பொத்தப்பி நாட்டில். தன்: அசைநிலை. இவர்-இந்தக் கண்ணப்ப நாயனார். திருப்பதி-வாழ்ந்த அழகிய ஊர். யாது. எது.