பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 பெரிய புராண விளக்கம்-4

ஆறு தினங்களில் முக்தியை அடைந்தார். காளத்திநாதரைப் பூசித்து வந்த சிவகோசரியார் என்னும் அந்தணர் இந்தத் தலத்தில் வழிபட்டு முக்தியை அடைந்தார். நக்கீரரும் வழிபட்டுப்பேறு பெற்றார்; அவர் பாடிய கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி என்ற நூலில் இந்தத் தலத்தின் பெருமையைக் காணலாம். இந்தத் தலத்தைத் தட்சிண கைலாசம் என்பர். ‘.

சில ந்திமாசுணம் மும்மதக் கரிசிவ கோசன் மலைந்தி டும் சிலை வேட்டுவன், கீரனே மடவார் பலங்த ரும்வழி பாட்டினாற் பாட்டினாற் பானைக் கலந்து முத்திசேர் தென்பெரும் கயிலையும் கண்டான்." என்ற கந்தபுராணப் பாடல் இந்தத் த லத் தி ல் வழி பட்டுப்பேறு பெற்றவர்கள் இன்னார் என்பதைக் கூறுகிறது. இந்தத் தலத்தைப் பற்றிய ஒரு பாசுரம் வருமாறு : வேயனைய தோளுமையோர் பாகமது வாகவிடை

- ஏறுசடைமேற் றுயமதி சூடிசுடு காடில்கடம் ஆடிமலை தன்னை

  • . . . . வினவில் வாய்கலசமாகவழி பாடுசெயும் வேடன்மல ராகும்.நயனம் காய்கணையி னாவிடக் தீசனடி கூடுகாளத்தி மலையே."

இது சாதாரிப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய திருப்பதிகத்தில் வரும் 4-ஆம் பாசுரம், அவர் கொல்லிப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு : -

முத்துமா மணிகளும் முழுமலர்த் திரள்களும் எத்துமா முகலியின் கரையினில் எழில்பெறக் கத்திட அரக்கனைக் கால் விரல் ஊன்றிய அத்தன்றன் காளத்தி அணைவது கருமமே. இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் டிாடியருளிய திருத்தாண்டகம் ஒன்று வருமாறு: