பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 49

திருக்காளத்தி-அழகிய காளஹஸ்தியில் இறைவனை வழி பட்ட க் சந்தி. கண்ணப்பர் - கண்ணப்ப நாயனார். திருநாடு-திருவவதாரம் செய்த அழகிய நாடு, நாவலர்நாவலர்களாகிய கவிஞர்கள்: . ஒருமை பன்மை மயக்கம். புகழ்ந்து-புகழ்களை வைத்துப் பாடி, போற்றும்-வாழ்த்தும். நல்.நல்ல. வளம்-நீர் வளம், செல்வ வளம், நன்மக்கள் வளம் முதலிய வளங்கள்; ஒருமை பன்ம்ை மயக்கம். பெருகிபெருகி அமைந்து. நின்ற-நிவைத்து நின்ற, பூ-நீர்ப்பூக்கள்; ஒருமை பன்மை மயக்கம், அவையாவன: செந்தாமரை மலர், வெண்டாமரை மலர், ஆம்பல் மலர், அல்லி மலர், குமுத மலர், செங்கழு நீர்ப்பூ, நீலோற்பல மலர் முதலியவை. அலர்-மலரும். வாவி-வாவியும்; "வாபீ என்ற வடசொல் வின் திரிபு. சோலை-பூம்பொழிலும். சூழ்ந்த-சுற்றி அமைந்த. பொத்தப்பி நாடு என்பர்-பொத்தப்பி நாடு என்று சான்றோர் கூறுவர்.

திருக்காளத்தி: இது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சிவத்தலம். இங்கே திருக்கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங்கள் காளத்தி நாதர், காளஹஸ்தீசுவரர், கன நாதர் என்பவை. அம்பிகை ஞானப்பூங்கோதை. தீர்த்தம்: பொன் முகலியாறு; இதற்குச் சுவர்ணமுகி என்பது வட மொழித் திருநாமம். இந்தத் தலம் ரேணுகுண்டாவிலிருந்து வடகிழக்கில் 15 மைல் தூரத்தில் உள்ளது. திருக்கோயில் பொன் முகலிப்ாற்றின் கீழ்க்கரையில் காளத்தி மலையின் அடிவாரத்தில் உள்ளது. இது பஞ்ச பூதத்தலங்களில் ஒன்றாகிய வாயுத்தலம். காளத்தி நாதருடைய சந்நிதியில் எரியும் திருவிளக்குக்களில் ஒன்று காற்றினால் அலைக்கப் பட்டதைப் போல எப்போதும் அசைந்து கொண்டே இருக் கிறது. பூரீ காளஹஸ்தி என்பது சிலந்தி (g), பாம்பு (காளம்), யானை (ஹஸ்தி) என்னும் மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்றன என்பதைக் குறிக்கும். திருக்காளத்திமலை யில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கப் பெருமானை வழி பட்டுத் தம் கண்ணை இடந்து அப்பிய கண்ணப்ப நாயனார்

- . بي سياست . والي 40