பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 59 .

குறிச்சி-குறிஞ்சி நிலத்து ஊராகிய உடுப்பூரில். வாழ்க்கைவாழும் வாழ்க்கைக்குத் துணைவியாகிய, மனைவியும். இல்லாளும். தத்தை என்பாள்-தத்தை என்னும் பெயரைப் பெற்றவள். - - -

அடுத்து வரும் 9-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'அந்தத் தத்தை என்னும் பெண்மணி அருமையாகப் பெறுவதற்குரிய வேடர்களுக்குரிய் தாயபாகம் அமைந்த பழைய குடும்பத்தில் பிறந்தவள் கருமை நிறம் கொண்ட புலியினுடைய பற்களால் செய்த தாலிக்கு நடு நடுவில் சங்கு மணிகளைக் கோவையாகக் கோத்து. அந்தக் கோவை: தன்னுடைய பெருமையைப் பெற்ற முதுகில் கிடந்து" புரளுமாறு அணிந்திருப்பவள். மயிற் பீலியும் குழைகளும் முதுகின் பக்கம் மோத, வண்டுகள் மொய்க்கும் தழைகளை யும் மலர்களையும் சேர்த்துக் கட்டிய மாலையைத் தன் னுடைய முன்னுச்சி மயிரில் அணிந்துகொண்ட, அச்சத்தை உண்டாக்கும் பெண் சிங்கத்தைப் போல விளங்குபவள்." பாடல் வருமாறு: -

அரும்பெறல் மறவர் தாயத் தான்றதொல் குடியில்

- - வந்தாள்; இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவு

- கோத்துப் பெரும்புறம் அலையப் பூண்டாள்; பீலியும் குழையும்

  • - தட்டச்

சுரும்புறு படலை முச்சிச் சூர் அரிப் பிணவு போல்

வாள். '

அரும்பெறல்-அந்தத் தத்தை என்னும் பெண்மணி' அருமையாகப் பெறுவதற்குரிய. மறவர்-வேடர்களுக்கு உரிமையாகிய ஒருமை பன்மை மயக்கம். தாயத்து-தாய பாகம் அமைந்த. தாயம். இறையிலி நிலம் முதலியவை. ஆன்ற-அமைந்த. தொல்-பழைய. குடியில்-குடும்பத்தில். வந்தாள்-பிறந்தவள். இரும் - கரிய நிறத்தைக் கொண்.