பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

off 0 பெரிய புராண விளக்கம்-4

டிருக்கும். புலி-புலியினுடைய. எயிற்று-பற்களால் செய்யப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். த், சந்தி. தாலி-தாலிக்கு. இடை இடை-நடு நடுவில். மனவு-சங்கு மணிகளை ஒருமை பன்மை மயக்கம். கோத்து-கோவையாகக் கட்டி, ப், சந்தி. பெரும்-அந்தக் கோவை தன்னுடைய பெருமையைப் பெற்றி ருக்கும். புறம்-முதுகில் கிடந்து. அலைய-புரளுமாறு. ப்:சந்தி. பூண்டாள்-அணிந்திருப்பவள். பீலியும்-மயிற் பீலியும். குழை யும்-காதுகளில் அணிந்த குழைகளும்; ஒருமை பன்மை மயக்கம். தட்ட-முதுகில் வந்து மோத, ச்: சந்தி. சுரும்புவண்டுகள்; ஒருமை பன்மை மயக்கம். உறு-மொய்க்கும். படலை-தழைகளையும் மலர்களையும் சேர்த்துக் கட்டிய மாலையை முச்சி முன்னுச்சி மயிரில் அணிந்து கொண்ட சி: சந்தி. சூர்-அச்சத்தை உண்டாக்கும். அரிப்பிணவு-பெண் சிங்கத்தை. போல்வாள்-போல விளங்குபவள்,

அடுத்து வரும் 10-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

'ஒப்புக் கூறுவதற்கு அருமையாகிய சிறப்பில் மிகுதியாக இருப்பவர்களாகிய இந்த நாகனுக்கும் தத்தைக்கும் இனி மேல் புதல்வர்களைப் பெறுதலே அருமையானது என்று யாரும் சொல்ல, அந்தப் புதல்வரைப் பெறுவதில் உண்டான விருப்பத்தால் மணம் பரவிய மாலையை அணிந்த சிவந்த வேலாயுதத்தை ஏந்திய முருகவேளுடைய திருக்கோயிலின் முற்றத்துக்குப் போய் அவனை வாழ்த்துவதைப் புரிந்து ஒவ்வொரு நாளும் இவ்வாறு வழிபடும் கடமையாகிய வழியில் நிற்பவர்கள் ஆனார்கள். பாடல் வருமாறு:

பொருவரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கினிப்

புதல்வர்ப் பேறே அரியதென் றெவரும் கூற அதற்படு காத லாலே முருகலர் அலங்கற் செவ்வேல் முருகவேள் முன்றிற்

  • - . சென்று பரவுதல் செய்து நாளும் பர்ாய்க்கடன் நெறியில் -

நிற்பார். '