பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70, - பெரிய புராண விளக்கம்-4

தைப் பெற்றவனுக்கு உருபு மயக்கம். க், சந்தி. கண்ணி னுக்கு:கண்களால் பார்ப்பதற்கு: ஒருமை பன்மை மயக்கம்: ஆகுபெயர். அணியாம்-அழகாக இருக்கும். தங்கள்-தங்க ளுடைய வேட்டுவச் சாதிக்கு உரிய. கலன்-ஆபரணங்கள்: ஒருமை பன்மை மயக்கம். பல-பலவற்றை. அணிந்தார்அணிந்தார்கள், ஒருமை பன்மை மயக்கம். அன்று, ஏ: இரண்டும் ஈற்றசை நிலைகள்.

பிறகு உள்ள 18-ஆம் கவியின்.உள்ளுறை வருமாறு:

மலையில் எழுந்தருளியிருக்கும். தெய்வத்திற்கு உரிய காப்பை வேடர்களின் சாதிக்கு உரிய வழக்கப்படி தங்களுடைய குற்றம் இல்லாத பழைய முறைக்கு ஏற்ற லாறு பொருத்தமாக உள்ள காரியங்களை அந்தத் தெய்வுத்தை வாழ்த்திப் புரிந்து, நறுமணம் வீசும் இளமையான தளிர்களையும் அந்த ஆண் குழந்தையினு டைய தலையில் அணிந்து வேப்பந்தழையைக் கட்டி நடுவில் கோத்த பாசி மணிகளையும் சோழிகளையும் இடுப்பில் கட்டி அழகு பெறும் வண்ணம் அவனை வளர்த்து வரும் காலத்தில். பாடல் வருமாறு:

" வரையுறை.கடவுட் காப்பு மறக்குடி மரபில் தங்கள் புரையில்தொல் முறைமைக் கேற்பப் பொருந்துவ - - - போற்றிச் செய்து

விரையிளம் தளிரும் சூட்டி வேம்பிழைத் திடையே

கோத்த அரைமணிக்கவடிகட்டி அழகுற வளர்க்கும் நாளில். "

இந்தப் பாடல் குளகம். வரை-மலையில். உறை-எழுந்: தருளித் தங்கும். கடவுள் தெய்வத்திற்கு உரிய, காப்பு. காப்பை. மறக்குடிவேடர்களின் சாதிக்குரிய, மரபில்வழக்கப்படி தங்கள்-தங்களுடைய புரை-குற்றம். இல்இல்லாத கடைக்குறை. முறைமைக்கு-முறைக்கு. ஏற்பஏற்றவாறு. ப்:சந்தி, பொருந்துவ-பொருத்தமான காரியங், சுளை, ப்ோற்றி அந்தத் தெய்வத்தை வாழ்த்தி. ச்: சந்தி.