பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பெரிய புராண விளக்கம்-4

தேசுடை மருப்பில் தண்டை செறிமணிக் குதம்பை

மின்ன மாசறு கோலம் காட்டி மறுகிடை ஆடும் நாளில். '

இந்தப் பாடலும் குளகம். பாசொளி-பச்சையான பிரகாசத்தை வீசும், மணியோடு-பாசிமணிகளோடு: ஒருமை பன்மை மயக்கம். ஆர்த்த-கட்டிய. பல்-பல. மணிமாணிக்கங்களால் செய்த; ஒருமை பன்மை மயக்கம். ச். சந்தி. சதங்கை-சலங்கை, ஏங்க-இடுப்பில் ஒலிக்க. க்: சந்தி. காசொடு-தங்கக் காசுகளோடு; ஒருமை பன்மை மயக்கம். தொடுத்த-கட்டிய காப்பு-காப்புக்களாகிய ஒருறுை பன்மை மயக்கம். கலன்-ஆபரணங்களை அணிந்து; ஒருமை பன்மை மயக்கம். புனை-இடுப்பில் அணிவதற்குரிய. அரைஞாண்அரை நாணையும். சேர்த்தி-கட்டிவிட்டு. த், சந்தி. தேசுஉடை-ஒளியைப் பெற்ற. மருப்பில்-யானைத் தந்தத்தினால் செய்த தண்டை-தண்டைகளையும்; ஒருமை பன்மை: மயக்கம். இவை திருவடிகளில் அணிபவை. இவற்றை அணிந்து கொண்டு. செறி-நெருங்கிய, மணி-மாணிக்கங்: களாற் செய்த ஒருமை பன்மை மயக்கம். க், சந்தி. குதம்பைகாதணிகள்: ஒருமை பன்மை மயக்கம். மின்ன-செவிகளில்: மின்னலைப் போல ஒளியை வீச. மாசு-ஒரு குற்றமும், அறுஅற்ற கோலம்-தம்முடைய திருக்கோலத்தை. காட்டியாவரும் காணுமாறு காண்பித்து. மறுகிடை-வீதியில், ஆடும் -விளையாடும். நாளில்-காலத்தில்.

பிறகு உள்ள 22-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "குளிர்ச்சியை உடைய மலர் மாலையை அணிந்த தம்முக டைய தந்தையாகிய நாகனும், அன்னையாகிய தத்தையும் உள்ளங்கள் மகிழ்ச்சியை அடையும் வண்ணம் அவர்களிடம். வந்து புண்ணியமான கங்கையாற்றில் ஒடும் புனலைவிடத் தூயதாகும் தம்முடைய அழகிய வாயிலுள்ள எச்சில் நீரினால் உள்ளே நனைந்து அமுதத்தைப் போல ஊறி ஒழுகி வந்த மழலையாகிய இனிய வார்த்தைகளைப் பேசும் சிவந்த, நிறத்தைக் கொண்ட மென்மையான பவளத்தைப் போன்ற