பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் - 73

என்றது நாகனையும் தத்தையையும். அணைந்து-அடைந்து. செல்ல-கழிய. விடும்-நடக்கும். அடி-திருவடிகளில்; ஒருமை பன்மை மயக்கம், த்: சந்தி, தளர்வு-தளர்ச்சி. நீங்கி-அகன்று; தளர் நடைப்பருவம் அகன்று என்றவாறு. ப்: சந்தி, பூண்அணிகலனாக. திகழ்-விளங்கும். சிறு-சிறிய, புன்-சிவந்த. குஞ்சி-தலைமயிரில். புலி-புவியினுடைய உகிர்-நகங்களால் செய்த, ஒருமை பன்மை மயக்கம். ச்: சந்தி. சுட்டி-சுட்டியை. சாத்தி-அணிந்து. மூண்டு எழு-மூண்டு எழுந்து. சினத்துகோபத்தையும். ச்: சந்தி. செம்-சிவந்த கண்-கண்களையும் பெற்ற : ஒருமை பன்மை மயக்கம். முளவு-முள்ளம் பன்றி யினுடைய. முள்-முட்களை ஒருமை பன்மை மயக்கம். அரிந்து-வெட்டி, கோத்த-கோவையாகக் கோத்துச் செய்த. நாண் தரும்-கயிற்றோடு சேர்ந்து விளங்கும். எயிற்று-புலியி னுடைய பற்களால் செய்த ஒருமை பன்மை மயக்கம். த், சந்தி. தாலி-தாலியை. நலம்-அழகு. கிளர்-கிளர்ந்து விளங்கும். மார்பில்-அவருடைய மார்பில், துங்க-தொங்கச்

பின்பு வரும் 21-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

'பச்சை நிறத்தைப் பெற்ற ஒளியை வீசும் பாசிமணி களோடு கட்டிய பல மணிகளைக் கொண்ட சலங்கை இடுப்பில் ஒலிக்கத் தங்கக் காசுகளோடு தொடுத்து அமைத்த காப்புக்களாகிய ஆ ப ர ன ங் க ைள அணிந்து அரை நாணையும் கட்டிவிட்டு ஒளியைப் பெற்ற யானைத் தந்தத் தினால் செய்த தண்டைகளைத் திருவடிகளில் அணிந்து, நெருங்கிய மாணிக்கங்களால் ஆகிய காதணிகள் செவிகளில் மின்னலைப் போல ஒளியை வீச. குற்றமற்ற தம்முடைய திருக்கோலத்தைக் காண்பித்துத் தெருவில் அந்தத் திண்ண்

னார் விளையாடும் காலத்தில்.’ பாடல் வருமாறு: - பாசொளி மணியோ ட்ார்த்த பன்மணிச் சதங்கை

- . . . ஏங்கக் காசொடு தொடுத்த காப்புக் கலன்புனை அரைஞாண்.

சேர்த்தித்