பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பெரிய புராண விளக்கம்-4

தன்னுடைய கையில். க் சந்தி, கொண்டு-எடுத்துக் கொண்டு. ஒச்ச-அந்தப் புலியை ஒட்ட இரு சுடர்க்குகாளஹஸ்தீசுவரருடைய சூரிய சந்திரர்கள் என்னும் இரண்டு சுடர்களாகிய கண்களுக்கு. சுடர் : ஒருமை பன்மை மயக்கம். உறுகண்டது ன் பத் ைத. தீர்க்கும்-போக்கப் போகும். எழில்-அழகு. வளர்-வளரும். கண் அவருடைய கண்களிலிருந்து; ஒருமை பன்மை மயக்கம். நீர் மல்கி-நீர் பெருகி. வரு துளி-வருகின்ற துளிகளாகிய, ஒருமை பன்மை மயக்கம். முத்தம்-முத்துக்களை ஒருமை பன்மை மயக்கம். அத்தாய்-அவருடைய அன்னையாகிய அந்தத் தத்தை. வாய் தன்னுடைய வாயால், முத்தம்-அவருக்கு முத்தங் களைக் கொடுக்க; ஒருமை பன்மை மயக்கம். கொள்ளஅவற்றைப் பெற்றுக் கொண்டு; எச்சத்திரிபு. மாற்றி-அவர்

தம்முடைய கண்ணிரைப் போக்கிக் கொண்டு.

பின்பு உள்ள 24-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: 'திண்ணனார் உடுக்கினுடைய வடிவத்தில் செய்யப் பெற்ற கட்டையை உருட்டிக் கொண்டு அதன் பின்னால் ஒடிக் கட்டிய வேட்டை நாய்களின் கயிறுகளைத் தம்முடைய கையைச் சுற்றிப் பிடித்து அறுத்துவிட்டு வேட்டுவச்சாதி ஆண் குழந்தைகளும் பேதைப் பருவத்தில் உள்ள பெண் குழந்தைகளும் கட்டிய விளையாட்டுச் சிற்றில்களைத் தம் முடைய திருவடிகளாகிய சிறிய தளிர்களால் அழித்து விட்டுப் பக்கத்தில் வந்து சேர்ந்த சிறுவர்களோடும் குடியிருத்தலை உடைய நெருங்கிய குடிசைகள் உள்ள எல்லா இடங்களிலும் குறுகத் தம்முடைய திருவடிகளை வைத்து நடக்கும் நடை யோடு குறும்புகளைப் புரிந்து. பாடல் வருமாறு:

துடிக்குற டுருட்டி ஒடித் தொடக்குகாய்ப் பாசம் சுற்றிப்

பிடித்தறுத் தெயினப் பிள்ளைப் பேதையர் இழைத்த

- வண்டல் அடிச்சிறு தளிராற் சிங் தி அருகுறு சிறுவ ரோடும் குடிச்செறி குரம்பை எங்கும் குறுநடைக் குறும்பு

- செய்து.'