பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகண்ணப்ப நாயனார் புராணம் 79

இந்தப் பாடலும் குளகம். துடி-திண்ணனார் உடுக்கினு டைய வடிவத்தில் செய்யப் பெற்ற குறடு-கட்டையை. உருட்டி-உருட்டிக் கொண்டு. ஒடி-அதன் பின்னால் ஒடி: த் : சந்தி. தொடக்கு-கட்டிய நாய்-வேட்டை நாய்களின்; ஒருமை பன்மை மயக்கம். ப் சந்தி. பாசம்-கயிறுகளை; ஒருமை பன்மை மயக்கம். சுற்றி-தம்முடைய கையைச் சுற்றி. ப் சந்தி. பிடித்து அறுத்து-பற்றி அறுத்துவிட்டு. எயினப்பிள்ளை-வேட்டுவச்சாதி ஆண் குழந்தைகளும்; ஒருமை பன்மை மயக்கம். ப் சந்தி. பேதையர்-அந்தச் சாதியிற் பிறந்த பேதைப் பருவப் பெண் குழந்தைகள்; ஒருமை பன்மை மயக்கம், இழைத்த-மணலால் கட்டிய. வண்டல்-விளையாட்டுச் சிற்றில்களை; ஆகுபெயர். அடிதம்முடைய திருவடி களாகிய, ஒருமை பன்மை மயக்கம். ச்: சந்தி. சிறு-சிறிய, தளிரால்-தளிர்களால்; ஒருமை பன்மை மயக்கம். தளிர்-முற்றாத இலை. சிந்தி-அழித்துவிட்டு. அருகு உறு-தம் முடைய பக்கத்தில் வந்து. சிறுவரோடும்வேட்டுவச்சாதிச் சிறுவர்களோடும்; ஒருமை பன்மை மயக்கம், குடி-குடும்பங்கள்; ஒருமை பன்மை மயக்கம். ச்: சந்தி. செறி-நெருங்கி வாழும். குரம்பை-குடிசைகள்; ஒருமை பன்மை மயக்கம். எங்கும்-எல்லா இடங்களிலும்; .ஒருமை பன்மை மயக்கம். குறுநடை-தம்முடைய திருவடி களைக் குறுக வைத்து நடக்கும் நடையோடு. க்: சந்தி. குறும்பு-குறும்புகளை ஒருமை பன்மை மயக்கம். செய்துபுரிந்து. &

பிறகு உள்ள 25-ஆம் பாடலின் கருத்து வருமாறு : - அத்தகைய குறும்புகள் பலவற்றையும் திண்ணனார் புரிந்து, ஐந்து பிராயத்துக்குமேல் உண்டான ஆறாம் பிராயத்தில் புனைந்த அழகைப் பெற்ற கண்ணிகளைத் தங்களுடைய தலைகளில் அணிந்து கொண்டிருந்த வேட்டு வச் சாதியிற் பிறந்த சிறிய வலிமையைப் பெற்ற சிறுவர் களோடும் மரக்கிளைகளில் மலர்கள் மலர்ந்திருக்கும் பூஞ்சோலைக்குச் சென்று அங்கே விளையாடி நெருங்கி அமைந்த குடும்பங்கள் வாழும் குறிஞ்சி நிலத்து ஊராகிய