பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 . . பெரிய புராண விளக்கம்:

குறிச்சியைச் சுற்றியுள்ள புனைந்த யானைத் தந்தங்களி' னாற் செய்த உழலை மரத்தைப் பெற்ற வேலிக்கு வெளி யில் உள்ள சிறிய காட்டிற்குச் சென்று. பாடல் வருமாறு :

அனையன பலவும் செய்தே ஐந்தின்மேல் ஆன ஆண்டின் வனை தரு வடிவார் கண்ணி மறச்சிறு மைந்தரோடும் சினைமலர்க் காவுள் ஆடிச் செறிகுடிக் குறிச்சி சூழ்ந்த புனைமருப் புழலை வேலிப் புறச்சிறு கானிற் போகி.'

இந்தப் பாடலும் குளகம். அனிையன்-அத்தகைய குறும்புகள். பலவும்-பலவற்றையும். செய்து-திண்ணனார். புரிந்து. ஏ. அசைநிலை. ஐந்தின்மேல்-ஐந்து பிராயத்துக்கு. மேல். ஆன-உண்டான. ஆண்டின்-ஆறாம் பிராயத்தில். வனைதரு-தலையில் அணிகின்ற வடிவு ஆர்-அழகிய வடிவம் நிரம்பிய கண்ணி-கண்ணிகளைத் தங்களுடைய, தலைகளில் அணிந்திருந்த ஒருமை பன்மை ம்யக்கம். மறவேட்டுவச் சாதியிற் பிறந்த, ச் : சந்தி. சிறு-சிறிய, மைந்த, ரோடும் - வலிமையைப் பெற்ற ஆண் பிள்ளைகளோடும்;: ஒருமை பன்மை மயக்கம். சினை-மரங்களில் உள்ள கிளை களில் மலர்ந்த அந்த மரங்களாவன : வேங்கை மரம், வாகை மரம், புளிய மரம், கடப்ப மரம், மாமரம், பூவரச மரம், பவள மல்லிகை மரம், வில்வ மரம், வாத நாராயண மரம், வேப்ப மரம் முதலியவை. சினை : ஒருமை பன்மை மயக்கம். மலர்-மலர்கள் மலர்ந்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். க், சந்தி. காவுள்-சோலைக்குள் சென்று. ஆடிஅங்கே விளையாடி விட்டு. ச்: சந்தி. செறி-நெருங்கிஅமைந்த. குடி-வேடர்களினுடைய குடும்பங்கள்: ஒருமை பன்மை மயக்கம். க், சந்தி. குறிச்சி-வாழும் குறிஞ்சி நிலத்து ஊராகிய உடுப்பூரை. சூழ்ந்த-சுற்றியுள்ள. புனை-பூனைக். கட்டிய. மருப்பு-யானைத் தந்தங்களாற் செய்யப் பெற்ற: ஒருமை பன்மை மயக்கம். உழலை-உழலை மரம் உள்ள;. இது போகிறவர்கள் சுழலச் செய்து போன பிறகு மீட்டும் தன் நிலையில் வந்து நிற்கும் மரம். வேலி-வேலியினுடைய. ப் : சந்தி. புற-வெளியில் உள்ள. ச் சந்தி. சிறு-சிறிய, கானில்-காட்டுக்கு; உருபு மயக்கம். போகி-சென்று.