பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் :81

பிறகு உள்ள 26-ஆம் பாடலின் கருத்து வருமாறு :

வேகமாக ஒடும் முயற்குட்டியோடும், காட்டுப் பன்றி யின் குட்டி, வளைந்த கோடுகளைக் கொண்ட புலிக்குட்டி, சிவந்த ஒநாயினுடைய வளைந்த காதுகளைப் பெற்ற குட்டி ஆகியவற்றை முடுக்கிய வேகத்தோடு ஒடி அவற்றைத் தொடர்ந்து சென்று, அவை எல்லாவற்றையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டு வந்து வீடுகளினுடைய முற்றங்களில் வைத்து வளர்த்த மரங்களினுடைய கூட்டத்தில் கட்டி வளர்க்கின்ற விலங்குகள் கணக்கு இல்லாதன ஆகும்.' பாடல் வருமாறு : -

கடுமுயற் பறழி னோடும் கானஏ னத்தின் குட்டி கொடுவரிக் குருளை செங்காய் கொடுஞ்செவிச்

- 8Ffy Li 1f).jp6ûr முடுகிய விசையில் ஒடித் தொடர்ந்துடன் பற்றி முற்றத் திடுமரத் திரளிற் கட்டி வளர்ப்பன எண்ணிலாத, .

கடு-வேகமாக ஒடும். முயற் பறழினோடும்.முயற்குட்டி யோடும். கான ஏனத்தின்-காட்டுப் பன்றியினுடைய. குட்டி-குட்டிய்ை, .ெ கா டு-வளைந்த வரி-கோடுகளைக் கொண்ட, ஒருமை பன்மை மயக்கம். க் சந்தி, குருளைபுவிக்குட்டியையும். செந்நாய் - சிவந்த ஓநாயினுடைய. .ெ கா டு ம்-வளைந்திருக்கும். செவி-காதுகளைப் பெற்ற: ஒருமை பன்மை மயக்கம். ச் சந்தி. சாபம்-குட்டி. ஆனஆகிய விலங்குகளை முடுகிய-முடுகியுள்ள. விசையில்வேகத்தோடு; உருபு மயக்கம். ஒடி-அவற்றின் பின்னால் ஓடிச்சென்று. த் : சந்தி. தொடர்ந்து-அவற்றைப் பின் பற்றிப் போய். உடன்-அவற்றை ஒருங்கே. பற்றி-பிடித்துக் கொண்டு வந்து. முற்றத்து-வீடுகளின் முன் உள்ள முற்றங் களில் ஒருமை பன்மை மயக்கம். இடும்-வைத்து வளர்க் கும். மரத்திரளில்-மரக்கூட்டங்களில். கட்டி-கட்டிவிட்டு, வளர்ப்பன-வேடர்கள் வளர்க்கும் விலங்குகள். எண். கணக்கு. இலாத-இல்லாதவை ஆகும்; இடைக்குறை.

- - تا به س-.1 G?t