பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 - * பெரிய புராண விளக்கம்-4

அடுத்து வரும் 27-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு :

'மலர்ந்த பகல் நேரம் போன மாலை நேரத்தில் வெண் சிறு கடுகுகளை நெருப்பில் இட்டு உண்டாக்கிய புகையை. யும் திண்ணனாருடைய திருமேனியில் படச்செய்து, அந்த வேட்டுவச் சாதியிற் பிறந்த முதுமைப் பருவத்தை உடைய குறத்தியாகிய தத்தை அவருக்கு உணவை உண்ணும் வண்ணம் செய்து, பிறகு அவரை எடுத்துக் கொண்டு சென்று கண்களை மூடித் துயிலச் செய்து, இரவு நேரம் விடிந்த பிறகு, மாமிசமாகிய உணவை வழங்கி அவர் செய்யும் விளையாட்டுக்குப் போகுமாறு அனுப்பிவிட்டு, இவ்வாறு சில முறைப்படி வரும் பிராயங்கள் நீங்க, வில்வித்தையைப் பழகும் பருவத்தை அந்தத் திண்ணனார் அடைந்தார்.' பாடல் வருமாறு : - - -

அலர் பகல் கழிந்த அந்தி ஐயவிப் புகையும் ஆட்டிக் குலமுது குறத்தி ஊட்டிக் கொண்டுகண் துயிற்றிக்

கங்குல். புலரஊன் உணவு நல்கிப் புரிவிளை யாட்டின் விட்டுச் சிலமுறை ஆண்டு செல்லச் சிலைபயில் பருவம்

- சேர்ந்தார்."

அலர்-மலர்ந்த பகல்-பகல் நேரம். கழிந்த-போன. அந்தி-அந்தியாகிய மாலை நேரத்தில். ஐயவி-வெண் சிறு - கடுகுகளை ஒருமை பன்மை மயக்கம். ப் சந்தி. புகை யும்-நெருப்பில் இட்டு உண்டாக்கிய புகையையும். ஆட்டிதிண்ணனாருடைய திருமேனி முழுதும்படச் செய்து. க் சந்தி. குல-அந்தக் குடும்பத்தில் பிறந்த முது-முதுமைப் பருவத்தை அடைந்திருக்கும். குறத்தி-திண்ணனாருடைய அன்னையாகிய தத்தை எ ன்னு ம் குறமகள். ஊட்டிஅவருக்கு உணவை வழங்கி உண்ணச் செய்து. க் சந்தி. கொண்டு-பிறகு அவரை எடுத்துக் கொண்டு சென்று. கண். கண்களை ஒருமை பன்மை மயக்கம். துயிற்றி - மூடி உறங்கக் செய்து. க் சந்தி. கங்குல் - இராத்திரி. புலர.