பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 33

விடிய, ஊன் - அந்தக் காலையில் மாமிசமாகிய, உணவுஉணவை. நல்கி-வழங்கி. ப்: சந்தி. புரி அவர் செய்யும். விளையாட்டின்-விளையாட்டுக்கு. விட்டு - அனுப்பி விட்டு. ச் : சந்தி. சில முறை-இவ்வாறு முறையாகச் சில. ஆண்டுபிராயங்கள்; ஒருமை பன்மை மயக்கம். செல்ல-கழிய. ச் : சந்தி. சிலை-வில் வித்தையை: ஆகுபெயர். பயில்பழகும். பருவம்-பருவத்தை. சேர்ந்தார்-அந்தத் திண்ண

னார் அடைந்தார். * பின்பு உள்ள 28-ஆம் பாடலின் கருத்து வருமாறு :

'திண்ணனாருடைய தகப்பனாகிய நாகனும் தன்னு டைய வலிமையைப் பெற்ற புதல்வராகிய அந்தத் திண்ண னாரைப் பார்த்துத் தன்னுடைய பருத்த தோள்களால் தன்னுடைய உள்ளம் உள்ளே மகிழ்ச்சியை அடையும் வண்ணம் அவரைத் தழுவிக் கொண்டு, அவருக்கு வில் வித்தையாகிய வேலையைப் பழக்க விரும்பி, முன்பு அந்தத் துறையில் தேர்ச்சி மிகுதியாக உள்ள முதியவராகிய ஒருவரை அழைத்துக் கொண்டு வந்து சேர்த்து, அந்த முதியவருக்குத் தெரிய வந்த நாளைக் குறிப்பிட்டது முதலிய எல்லாவற்றையும் வேடர்களுக்கு ஆள்மூலம் கூறி அனுப்பினான். பாடல் வருமாறு:

தங்தையும் மைந்தனாரை நோக்கித்தன் தடித்த தோளால் சிங்தையுள் மகிழப் புல்லிச் சிலைத்தொழில்

பயிற்ற வேண்டி முந்தைஅத் துறையில் மிக்க முதியரை அழைத்துக் கூட்டி வந்தநாட் குறித்த தெல்லாம் மறவர்க்குச் சொல்லி

விட்டான்.' தந்தையும் - திண்ணனாருடைய தகப்பனாகிய நாக னும். மைந்தனாரை-வலிமையைப் பெற்ற தன்னுடைய புதல்வராகிய அந்தத் திண்ணனாரை. நோக்கி-பார்த்து. த் : சந்தி. தன்மதன்னுடைய. தடித்த-பருத்த. தோளால்தோள்களால்; ஒருமை பன்மை மயக்கம். சிந்தை-தன்னு