பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 87

திசைகள் ஒவ்வொன்றிலும். திசை ஒருமை பன்மை மயக்கம். நெருங்க-நெருங்கியிருக்கும் வண்ணம். வ ந் தா ர்-வந்து சேர்ந்தார்கள்: ஒருமை பன்மை மயக்கம்.

அடுத்து வரும் 31 ஆம் பாடலின் கருத்து வருமாறு: ‘மிகுதியாகத் தாங்கள் கொண்டு வந்த மாணிக்கங்கள் முதலிய வளங்கள் யாவும் நிரம்பியிருக்க, ஒப்பு இல்லாத சிறிய ஊராகிய உடுப்பூரினுடைய எல்லைக்குள் அடங்காத வாறு கூட்டமாகக் கூடிக்கொண்டு அந்த வேடர்கள் கொண்டு வந்து சேர்த்தார்கள்; எல்லா இடங்களிலும் வாழும் பல பெரிய உறவினர்களும் வாழ்த்துமாறு தங்கள் குலதெய்வத்திற்கு வழிபடுவதற்குரிய கடமைகள் பலவற்றை யும் புரிந்து, வில்விழாவைக் கொண்டாடுவீர்களாக." என்று வேடர்களின் அரசனும் திண்ணனாருடைய தந்தையும் ஆகிய நாகன் வேடர்களிடம் கூறினான். பாடல் வருமாறு:

  • மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறில் சீறுார் எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்க்

தார்; எங்கும், பல்பெருங் கிளைஞர் போற்றப் பராய்க்கடன் பலவும்

செய்து வில் விழா எடுக்க." என்று விளம்பினான் வேடர்

- கோமான் .'

மல்கிய-மிகுதியாகத் தாங்கள் கொண்டு வந்து சேர்த்த. வளங்கள்-மாணிக்கங்கள் முதலிய வளங்கள். (இவை இன்ன என்பது முன் பாடலில் சொல்லப்பட்டன.) எல்லாம்-யாவும். நிறைந்திட-நிரம்பியிருக்க. மாறு-தனக்கு ஒப்பு. இல்-வேறு இல்லாத கடைக்குற்ை. சீறுார்-சிறிய ஊராகிய உடுப்பூரி னுடைய. எல்லையில்-எல்லைக்குள். அடங்கா வண்ணம்அடங்காதவாறு. ஈண்டினர்-கூட்டமாகக் கூடியவர்களாய்: முற்றெச்சம்; ஒருமை பன்மை மயக்கம். கொணர்ந்தார். அந்த வேடர்கள் கொண்டு வந்து சேர்த்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம். எங்கும்-எல்லா இடங்களிலும் வாழும்: