பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - - பெரிய புராண விளக்கம்-4

தொலைவில்பல் நறவும் ஊனும் பலங்களும் கிழங்கும்

துன்றச் சிலைபயில் வேடர் கொண்டு திசைதொறும் நெருங்க

- வந்தார். '

மலை-மலையில். படு-தோன்றும். மணியும்-மாணிக்கங் களையும்; ஒருமை பன்மை மயக்கம். பொன்னும்-தங்கத்தை யும். தரளமும்-முத்துக்களையும்: ஒருமை பன்மை மயக்கம். வரியின்-புலியினுடைய தோலும்-தோலையும். கொலைபுரி -கொலையைச் செய்யும். களிற்று-ஆண் யானையினுடைய. க்: சந்தி. கேர்டும்-த ந் தங்க ைள யும்; ஒருமை பன்மை மயக்கம். பீலியின்-மயிற் பீலிகளினுடைய, ஒருமை பன்மை மயக்கம். குவையும்-குவியலையும். தேனும்-தேனையும். தொலைவு-முடிதல். இல்-இல்லாத கடைக்குறை. பல்.பல வ்கையான, நறவும்-கள்ளுக்களையும்; ஒருமை பன்மை மயக்கம். அவையாவன தென்னங்கள், பனங்கள், ஈச்சங்கள், அரிசியால் உண்டாக்கிய கள் முதலியவை. ஊனும்-பலவகை மிருகங்களினுடைய மாமிசங்களும்; ஒரு ைம பன்மை மயக்கம். அந்த விலங்குகளாவன மான், காட்டுப் பன்றி, முயல், காட்டுப் பசு முதலியவை. பலங்களும்-பலவகையான பழங்களையும்; அவையாவன பூவன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம், பேயன் வாழைப்பழம், செவ் வாழைப்பழம், கருவாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், முந்திரிப்பழம், இலந்தைப்பழம் முதலியவை. கிழங்கும்-பலவகையான கிழங்குகளையும்: ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: வள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கூவைக் கிழங்கு முதலியவை. துன்ற-ஒன்றாகச் சேர்ந்து இருக்க. க்: சந்தி. சிலை-வில்லாயுதங்களை ஒருமை பன்மை மயக்கம். பயில்-பயன்படுத்திப் பழகிய வேடர்-வேடர்கள்; ஒருமை பன்மை மயக்கம். கொண்டு-மேலே கூறியவற்றை எடுத்துக் கொண்டு, திசைதொறும்-கிழக்கு, மேற்கு, வடக்கு, வட கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்னும்