பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 85

கோமான் - அரசனாகிய நாகன். நாதன்-தங்கள் தலைவ னும் குலதெய்வமுமாகிய வென்றி - பகைவர்களை வெல் லும் வெற்றியைப் பெற்ற, வேள்-முருகப் பெருமான்; செவ்வேள். அருளால்-வழங்கிய திருவருளினால். பெற்றபெற்றெடுத்த. சேடரின் - அறிஞர்களைப் போல; ஒருமை பன்மை மயக்கம். மிக்க-அறிவு மிகுதியாக அமைந்த. செய்கை-செயல்களைச் செய்யும், ஒருமை பன்மை மயக்கம். த் சந்தி. திண்ணன்-திண்ணன் என்னும் சிறுவன். வில் பிடிக் கின்றான்-வில்லைப் பிடித்துப் பயன்படுத்தும் வித்தையைக் கற்றுக் கொள்கிறான். என்று-என. ஆடு-அசையும். இயல்இயல்பைப் பெற்ற, துடியும்-உடுக்கையும் அடித்து. சாற்றி. அந்தச் செய்தியை அ றி வி த் து. அறைந்த-முழக்கிய. பேரோசை கேட்டு-பெரிய சத்தத்தைக் கேட்டு. மாடு-உடுப் பூருக்குப் பக்கத்தில். உயர்-உயரமாக உள்ள மலைகள்மலைகளை ஆளும்-ஆட்சி புரியும். மறக்குல வேட்டுச் சாதியிற் பிறந்த த்: சந்தி. தலைவர்-தலைவர்கள்: ஒருமை.

பன்மை மயக்கம். எல்லாம்-எல்லாரும்.

பிறகு வரும் 30-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

மலையில் தோன்றும் மாணிக்கங்களும், தங்கமும், முத்துக்களும், புலியினுடைய தோலும், கொலையைச் செய்யும் ஆண் யானையின் தந்தங்களும், மயிற் பீலிகளி னுடைய குவியலும், தேனும், தொலைதல் இல்லாத பல வகையான கள்ளும், மாமிசமும், பல வகையான பழங்களும், கிழங்குகளும் சேர வில்லைப் பிரயோகம் செய்து பழகிய வேடர்கள் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு திசையிலும் நெருக்கமாக இருக்குமாறு வந்து சேர்ந்தார்கள். பாட்ல் வருமாறு: , * மலைபடு மணியும் பொன்னும் தரளமும் வரியின்

- - தோலும் கொலைபுரி களிற்றுக் கோடும் பீலியின் குவையும் -

. . . . தேனும்